சிரிக்கும் பூக்கள்
      

பொருள்கள் குறித்து, கற்பனை நயத்துடன் பல பாடல்களை
இயற்றி வருபவரும், தற்போது சாகித்ய அகாதமியின் மண்டலச்
செயலாளராகச் சென்னையில் பணியாற்றுபவருமாகிய திரு. தம்பி சீனிவாசன்
அவர்கள்,

குழந்தைப் பாடல்கள் எழுதுவதில் சிறந்து விளங்குபவரும்,
காரைக்குடி குழந்தை இலக்கியச் சங்கத்தின் பொதுச் செயலாளரும், என்
மேல் அளவுக்கு மீறிய பற்றும் பாசமும் வைத்துள்ளவருமாகிய திரு.
பொன்ராசன் அவர்கள்,

இந்நூல் உருவாகப் பல வகையிலும் உதவி புரிந்துள்ளவரும்,
குழந்தை எழுத்தாளர் சங்கப் பொதுச் செயலாளருமாகிய திரு. எச்.
கிருஷ்ணமூர்த்தி அவர்கள், ஆகியோருக்கும் இன்னும் இத் தொகுப்பு
நன்முறையில் வெளிவரப் பல்வேறு கட்டங்களிலும் ஆர்வமுடன் உதவிய
அன்பர்கள் பலருக்கும் என் மனங்கனிந்த நன்றியைத்
தரிவித்துக்கொள்ளுகிறேன்.

குழந்தைகளின் கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில்
இந்நூலுக்குப் பொருத்தமான ஓவியங்களை வரைந்து தந்துள்ள புகழ்மிக்க
ஓவியர்களான திருவாளர்கள் உமாபதி, லதா, சுப்பு, விஜயன், ஆழி. வே.
ராமசாமி ஆகியோருக்கும் என் நன்றி.

இத்தொகுப்பிலுள்ள பாடல்களில் சிலவற்றைத் தவிர மற்றவை
யாவும் அவ்வப்போது பத்திரிகைகளில் வெளிவந்தவையே. கல்கி தீபாவளி
மலர்களிலும், விடுமுறை மலர்களிலும், கண்ணன், கோகுலம், ரத்னபாலா,
கலைமகள், குமுதம், ஆனந்த விகடன், அமுதசுரபி முதலிய இதழ்களிலும்
இடம் பெற்றவை. வண்ணப் படங்