தொடக்கம்


எஸ்.டி. சோமசுந்தரம்

தலைமைச் செயலகம்

வருவாய்த் துறை அமைச்சர்

சென்னை - 600 009

நாள் : 27-12-1994

தஞ்சாவூர், கவின்கலைகளுக்குத் தாயாக விளங்கும் தமிழ்ப் பூமி.

இசை, நாட்டியம் போன்ற கலைகளுக்குத் தென்னிந்தியாவில் தஞ்சாவூர் தான் பிறப்பிடமாகும்.

தஞ்சையில் வாழ்ந்த ஆபிரகாம் பண்டிதர் சித்த மருத்துவத்தில் உயர்ந்து விளங்கியதோடு தமிழிசையிலும் தலைசிறந்து விளங்கினார்.

இவர் கருணானந்தர் என்ற இசைத்தமிழ்ப் பெரியாரிடம் இசை மரபுகளை நுட்பமான ஆராய்ச்சி முறைகளுடன் கற்றறிந்தவர்.

‘கருணாமிர்த சாகரம்’ என்னும் இசை நூல் படைத்தவர்.

தமிழிசையின் தொன்மையையும் சிறப்பையும் வெகுவாக எடுத்துச் சொல்லி அதன் மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்.

மறைமலையடிகள், திரு.வி.க. போன்ற தமிழ்ச் சான்றோர் வெகுவாகப் பாராட்டும் கருணாமிர்த சாகரம் 1914-இல் வெளிவந்தது.

எண்பது ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ஒப்பற்ற இசை நூலை எட்டாம் உலகத் தமிழ் மாநாடு மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் புரட்சித் தலைவி அவர்கள் முயற்சியால் தஞ்சையில் நடைபெறும் வேளையில் கீழையியல் ஆய்வு நிறுவனக் கல்வி அறக்கட்டளை மறுபதிப்புக் குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

தமிழ் மக்கள் அனைவரும் இந்த நூலைப் பெற்றுப் பயனடைய விழைகிறேன்.

(எஸ்.டி. சோமசுந்தரம்)



முன்பக்கம்