8

தோற்றப் பொலிவு

எழில் மிக்க எடுப்பான தோற்றம், புன்னகை பூத்துப் பொலிவோடு
விளங்கியமுகம்,அறிவுமுதிர்ச்சிக்கு அடையாளமான அகன்ற
நெற்றி , அன்பும் அறிவும் சுழல் விளக்குப்போல் சுடர்விட்டுப் பொங்கும்
கண்கள்,எடுப்பான கூரிய மூக்கு,உடல் நலம் காட்டும்
அழகானபற்கள்,நீண்ட மெல்லிய கைகள்,பெண்மையின் மென்மை
ஓடும்உடல் ,எண்ணங்களை எல்லாம் எழுத்தாக்கிய பரந்த நெஞ்சம்
உடையவராக அவர் விளங்கினார்.

தனிப் பண்புகள்

அவர் மனத்தால் கூடப் பிறருக்குத் தீங்கு எண்ணாமல்
சான்றோராகவாழ்ந்தார்.

ஒன்றனை இழந்தாலோ அல்லது தொலைத்துவிட்டாலோ
அதற்காகஅவர் கவலைப்பட்டதில்லை.காரணம்,அதனால்பயன்
இல்லை என்பதுஅவரது கருத்து. வீணாக வருந்தும்நேரத்தை வேறு
ஆக்கவேலைக்குப்பயன்படுத்த வேண்டும் என்பதேஅவரதுகொள்கை.

அவர் கடமையை ஒருபோதும் மறந்ததில்லை;செய்வன,
திருந்தச்செய்தார் ; காலத்தைப் பொன்போல் போற்றினார்.

உலகக் குடிமகனின் பெருவாழ்வு

அவர் எண்ணத்தால், எழுத்தால், செயலால், சொல்லால் பலருக்கு
“நல்வாழ்வு” தந்து உலகக் குடிமகனாக உயர்ந்தார்.சுருங்கக்கூறின்,
அவர்

அன்பில்
நெகிழ்வு
அறிவில் தெளிவு
ஆக்கத்தில் ஊக்கம்
வாழ்வில எளிமை
உண்மையில் உயிர்ப்பு
உழைப்பில் ஓய்வின்மை
கொள்கையில் உறுதி
இயற்கையில் ஈடுபாடு