வரும். அவை வராவிடின்) பாடுவார்க்கும் படிப்பார்க்கும்
சுட்டித்தனம்
இல்லாக் குழந்தை போலவும், கட்சியற்ற அரசியல் போலவும் உணர்ச்சி
வறண்டு தோன்றும்.
இத்தகைய உவமைகள் மிகப் பலவுள. அவை தனிச்சுவையுடையன.
‘இரவுக்குறி முதலான எத்துணையோ துறைகள் சிறந்த பயனிலவாய்
ஒழியுங்காண். இருபாற்கும் உள்ளப்புணர்ப்பு இல்லைகாண்... மொழிந்து
செல்வர்மன்.. தொடர்பு காட்டியிருப்பர்மன்...
‘காண்’ என்னும் முன்னிலை யசையையும் ‘மன்’ என்னும் ஒழியிசை
இடைச் சொல்லையும் மீட்கும் முயற்சிஇது.
ஓவியம், ஆளான, இட்டபெயர், கூப்பிடுபெயர், கும்மாளம், விடாப்பிடி,
குளிர்ப்பாட்டு, எட்டாக்கை, வைத்துப் பாராமல் போல்வன வட்டார வழக்குச்
சொற்கள். உலக வழக்கில் காணப்பட்டு எழுத்தில் ஏறாத இத்தகைய
சொற்களை ஆள்வதில் இவர் ஆர்வமிக்கவர். ‘அவன் வளர்ந்த ஓவியம்’
என்பர். பருவமடைந்தவளை ‘ஆளானாள்’ என்பர். இட்டபெயர். இயற்பெயர்.
எட்டாக்கை - சேய்மையில், தூரத்தில்.
இளைஞியர், அன்பி, கயத்தி எனப் படைப்பார். தந்தைமை,
கணவன்மை, கன்னிமை, மனைவிமை, குமரமை எனப் பெயர்களைப் பண்பு
வடிவாக்குவார். உலகியம், உயிரியம், ஒழுக்கியம் என இயம் ஒட்டுச் சேர்த்துப்
புதுச்சொற் படைப்புக்கு வழிகாட்டுவார். சுவடு, சோடு, சோடி என வரும்.
சோடி - இணை. சூடு $டு ஆவதுபோல இதை $டி ஆக்கிவிட்டனர்.
இரண்டு இடங்களில் காதலர்களைச் சோடிகள் என ஆளக் காண்கின்றோம்.
மூதறிஞர் வ.சுப.மாவின் கட்டுரைகளாயினும் நூல்களாயினும் அவை
நின்று படித்து கவனித்து உள்வாங்கி, பிறகு அசைபோடவைக்கும்
திறனுடையன. பழந்தமிழ் நூல்கள் போல், ஒவ்வொரு சொல்லும்
காரணங்கருதி அமைக்கப்பட்டன. பத்திகளிடையே இயைபுடையன.
படைத்தவனின் முழுதறிந்த பழுதிலாப் புலமைப் பெருமிதத்தை
வெளிப்படுத்துவன. அதனால் அவ் எழுத்தை யாரும் கடினம் எனப்
புறக்கணிப்பதில்லை; தமக்குச் சில அரிய கருத்துவளம் கிடைக்குமென
ஆர்வத்துடிப்புடன் அழுந்திப் படிக்கவே காண்கின்றோம்.
அகத்திணைப் பாடல்கள் உலக இலக்கிய வரிசையில் தனித்தன்மைகள்
பலவுள்ள தனிச்சிறப்பிடம் பெறுவன. அப் பேரிலக்கிய நுழைவாயிலாக, இத்
‘தமிழ்க் காதல்’ என்றென்றும் பயன்படும். திருக்குறள் பயில்வார்
‘வள்ளுவத்தை’ யும் அகத்திணை கற்பார் ‘தமிழ்க்காதலை’ யும் தவிர்த்தல்
இயலாது. தவிர்த்தால் அவை பற்றிய கல்வியும் நிரம்புவதரிது.
தமிழண்ணல்
|