பிள்ளையார் பிறந்தார்

 

வடக்கே தெற்கே ஒட்டி,
வலது புறம் மூரி வச்சு
மூரி ஒழவிலே
முச்சாணி புழுதி பண்ணி
சப்பாணி பிள்ளையார்க்கு
என்ன என்ன ஒப்பதமாம்!

முசிறி உழவிலே
மொளைச்சாராம் பிள்ளையாரு,

ஒடு முத்தும் தேங்காயை
ஒடைக்கறமாம் பிள்ளையார்க்கு,
குலை நிறைஞ்ச வாழைப்பழம்
கொடுக்கறமாம் பிள்ளையார்க்கு,
இத்தனையும் ஒப்பதமாம்
எங்கள் சப்பாணி பிள்ளையார்க்கு!

 

வட்டார வழக்கு : முச்சாணி புழுதி=சாணம்+புழுதி ; ஒடு முத்தும்-ஓடு முற்றிய : கொடுக்கறமாம்-கொடுக்கிறோம்.

குறிப்பு:- பிள்ளையார் பிறப்பில் அவருடைய தாய் தந்தையர்கள் யார் என்று சொல்லப்படவில்லை. விநாயகர் சிவகுமாரனென்றோ, உமையாள் மகனென்றோ அழைக்கப்படவில்லை. உழவன் உழும்போது புழுதியிலிருந்து தோன்றுகிறார் பிள்ளையார். இது நாட்டார் நம்பிக்கை. முதல் விளைச்சலை பிள்ளையாருக்குக் கொடுக்கிறார்கள்.

சேகரித்தவர்:
கவிஞர் சடையப்பன்

இடம்:
சக்கிலிப்பட்டி,
தருமபுரி மாவட்டம்.