தாலாட்டு
ஆசாரி வாரும்

குழந்தைக்கு இப்பொழுது தொட்டில் வேண்டும். நல்ல தொட்டிலாக ஆக்கமுள்ள தொட்டிலாகச் செய்ய வல்லவர் கழுகுமலை ஆசாரி. அவரை அழைத்து தொட்டில் செய்ய வேண்டிக் கொள்ளுகிறாள் தாய்.

தொட்டிலில் கிடக்கும் இவன், அடுத்த வருஷம் நடை பயிலுவான்; கால் முளைத்தால் அடுத்த தெருவிற்கு ஓடுவான், பந்தடிப்பான். அடுத்த தெருக்களிலுள்ள வேறு சாதி நண்பர்கள் இவனை அருமையாகக் கொண்டாடுவார்கள். அவர்கள் இவனை மதிக்க வேண்டுமானால் கை, காது, கழுத்து இவற்றில் ஏதாவது ஒன்றிரண்டு அணிந்திருக்க வேண்டாமா? அதற்காகச் செட்டியாரிடம் ஆபரணங்கள் வாங்குகிறாள் தாய். தந்தை வந்ததும் பணம் கொடுத்து அனப்புகிறார்.

  ஆசாரி, ஆசாரி கழுகுமலை ஆசாரி
கழுகுமலை ஆசாரி நான் பெத்தானுக்கு
ஒரு நல்லூஞ்சல் கொண்டு வாரும்
அடித்த கைக்கு மோதிரமும்
அள்ளி விடச் சந்தனமும்
செட்டிமார் தெருவிலே என் கண்ணே
நீ சென்று விளையாடயிலே
நான் பெத்தான்,
செட்டிமார் பெண்களெல்லாம்
உன் செண்டு விலை மதிப்பார்.
பாப்பார தெருவிலே நான் பெத்தான்
பந்து விளையாடயிலே
பாப்பத்திப் பெண்களெல்லாம்
உன் பந்தை விலை மதிப்பார்
வெள்ளி மலைத் தெக் கொதுங்கி
வேடர் எல்லாம் தானோடி
வேடர் அறியாம
வேங்கை மரம் ஏது வள்ளி
காசி விசுவரோட, மனம்
கலங்காத கண்டனோட
பேசும் கிளி ராஜனோட
பின் துணையா வந்த கண்ணோ!
மங்களா கட்டி
மாமரங்கள் உண்டு பண்ணி!
மங்களா முன்னாலே நீ
மல்கோவா மாம்பழமோ!
கொல்லையிலே தென்னை வைத்து