| |
மழைக்கால இருட்டிலே
மாரளவு நாணலிலே
ஒத்தையிலே போவாயோடி
ஒருவன் கைப்
பத்தினியே?
கடுவு உறவானோம்
கண்டொரு
நாள் பேசினோமே
இன்னொரு நாள் பேசுதற்கு
இரங்கலையே உன் மனசு
!
|
|
காதலி
: |
கானம் கருத்த கானம்
கறிக் கேத்த
கொத்தமல்லி
மானங் கெட்ட
மச்சாவிக்கு
மாதம் ஒரு
வைப்பாட்டியா?
காத்துட்டுக்குக் கடலை வாங்கி
கழுகுமலை
திருனாப் பாத்து
மிச்சக் கடலை
இருக்கு-நம்ம
மச்சாவியக்
கூப்பிடுங்க
பாக்குத்
துவக்குதடா
பழமை உறவு
மங்குதடா
ஏலம்
கசக்குதடா-நம்ம
இருவரும் போற
பாதை
மருதையிலே
தேவதாசி
மான் மயிர்
சேலைக்காரி
ஆனைமேலே
கும்பம் வச்சு
ஆடுறாளே
தேவதாசி
|
|
காதலன்
: |
லேஞ்சு
விரிச்சலடி
நேரே தலை
வச்சுறங்கி
என்ன விட்டுக்
கண்ணசர
என்ன
மனம் கொண்டியடி
படுத்தா பல
நினைவு
பகல் நிறைஞ்சாக்
கண்ணீரு
உறக்கச்
சடவிலயும்
உன் நினைவாத்
தோணுதடி
படுப்பேன்
எந்திருப்பேன்
பாதவத்தி
உன்னாலே
காலு ரெண்டும்
கல்லுத் தூணு-உன்
மேலு ரெண்டும்
எண்ணெய்க்குடம் |