|
பொறந்த இடம்
சீரழிஞ்சேன்
இதுவும் பிறந்த வீட்டில் தந்தையின் பெருமையை நினைத்து அழும் மகளின்
ஒப்பாரிப் பாடலாகும்.
புள்ளித் தலையாணி
பொறந்த
இடம் கச்சேரி
புள்ளி நிறங்
கொலஞ்சன்
பொறந்த
இடம் சீரழிஞ்சேன்
பட்டு
தலையாணை
பாட்டன் வீடு
கச்சேரி
பட்டு நிறங்
கொலஞ்சன்
பாட்டன் வீடு
சீரழிஞ்சேன்
வட்டார வழக்கு
:
தலையாணை-தலையணை
;
கொலஞ்சன்-குலைந்தேன்.
|
சேகரித்தவர்
:
கவிஞர் சடையப்பன் |
இடம்:
அரூர்,
தருமபுரி மாவட்டம். |
|