|
இரும்புலக்கை தூக்கலாச்சே
கணவன் உயிரோடிருந்தான். அவனுக்குப் பொங்கிப் போட்டு நிம்மதியாக
வீட்டில் நிழலில் சுகமாக இருந்தாள். என்னாலுமே காலம் ஒன்றுபோல் செல்லதல்லவா?
அவளுடைய அந்த நிம்மதியான வாழ்க்கைகும் தடங்கல்
ஏற்பட்டது. உழைத்து சம்பாதித்துப்
போட்ட கணவன் இறந்தான். குழந்தை குட்டியுமில்லை. பிறந்த வீட்டு மனிதர்கள் என்று
சொல்லிக் கொண்டு அங்கே சென்று இருக்கவும் வழியில்லை. வயிற்றுப் பாட்டுக்கு என்ன செய்வது?
அவள் கூலி வேலை செய்யக்கிளம்பினாள். கூலியின் விஷயம் நமக்கு தெரியாதா? ஈ விழுந்த
கூழுக்காக இரும்புலக்கை தூக்கி எள்ளுக் குத்துகிறாள். சத்தில்லாத உளுத்தங் கூழுக்காக பாரமான
உலக்கை தூக்கி பருப்பு இடிக்க வேண்டி இருக்கிறது. இப்படியும் தான் உயிர் வாழ வேண்டிய நிலைமை
ஏற்பட்டதே என்று நினைத்துப் புலன்புகிறாள்.
எட்டு மலைக்கந்தாண்ட
ஈஸ்வரன்
கோயிலாண்ட
எள்ளு
ஒணத்திருக்கும்
இரும்புலக்கை
சாத்திருக்கும்
ஈ விழுந்த
கூழுக்காக-நான்
இரும்புலக்கை
தூக்கலாச்சு
பத்து
மலைக்கந்தாண்ட
பரமசிவன்
கோயிலாண்ட
பருப்பு
ஒணத்திருக்கும்
பார உலக்கை
சாத்திருக்கும்
பாசை
விழுந்த கூழுக்காக-நான்
பார உலக்கை
தூக்கலாச்சே
வட்டார வழக்கு:
பாசை-பாசி.
|
சேகரித்தவர்
:
கவிஞர் சடையப்பன் |
இடம்:
அரூர்,
தருமபுரி மாவட்டம். |
|