|
தாங்க முடியலியே
புகுந்த வீட்டின் கொடுமைகளுக்கு ஆளாகிறாள் அவள். மற்றவர்களின்
கொடுமைகளுக்கு மத்தியில் அவள் இருப்பது ஈச்ச
முள்ளும் தாழைமுள்ளும் குத்துவது போன்ற ஓயாத தொல்லையைத்
தருகிறது.
ஈச்ச முள்ளு
பள்ளத்திலே
இருந்தே சில
காலம்
ஈச்ச
முள்ளு குத்தரது
இருக்க
முடியலையே
தாள முள்ளு
பள்ளத்திலே
தங்கியிருந்தேன் சில
காலம்
தாள முள்ளு
குத்துது,
தாங்க
முடியலியே
|
சேகரித்தவர்
:
கவிஞர் சடையப்பன் |
இடம்:
அரூர்,
தருமபுரி மாவட்டம். |
|