|
நிறுத்துனாங்க கங்கையிலே
தனிமை மிகவும் கொடியது. இணைந்து இல்லற வாழ்க்கை நடத்தி வந்த
தம்பதிகளில் ஒருவர் பிரிந்து விட்டால், தனிமையில் இருப்பவர் நிலை பரிதாபத்துக்குரியது.
ஆண் மகனென்றால் மறுமணம் செய்து ஓரளவு தன் துன்பத்தை மாற்றிக் கொண்டு புது வாழ்வு தொடங்குவான்.
பொண்ணால் அப்படி வாழ முடியுமா? கணவனுடன் அவள் முழுமை பெறுகிறாள். அவன் இறந்த பின்பு உயிர்
வாழும் நடைப்பிணமா கத்தான் இருக்க முடியும். உயிர் உடலுடன் ஒட்டிக் கொண்டிருக்குமே தவிர
வாழ்க்கை சுவையில்லை.
தனிமை என்ற கொடுமையில் அவள் கஷ்டப்படுவதை மற்றவர்கள்
உணருகிறார்களா?
நீளக் கெணறு வெட்டி
நெலக் கெணறு
செட்டெறக்கி
நீள மிண்ணு
பாக்காம-என்னை
நிறுத்தனங்கெ
கெங்கையிலே
ஆளக் கெணறு
வெட்டி
ஆடிக் கெணறு
செட்டெறக்கி
ஆழமிண்ணு
பாக்காம-என்னை
அமுத்தினாங்க
கங்கையிலே
|
சேகரித்தவர்
:
கவிஞர் சடையப்பன் |
இடம்:
அரூர், தருமபுரி மாவட்டம். |
|