|
அணைந்த விளக்கு
கணவனை இழந்த கைம்பெண் புலம்பியழும் ஒப்பாரி பாடல் இது.
காதத்திலே நெய் விளக்கு
காணாத செல விளக்கு
காத்துப்
பட்டு அமியிலியே
கண்ணு பட்டு
அமிஞ்சிச்சே
சீமையிலே
நெய் வௌக்கு
சிந்தாத நெல விளக்கு
தூத்தலுக்கு
அமியிலியே
துயரத்துக்கு
அமிஞ்சிச்சே
தாழ மரத்தாண்ட-ஒரு
தயிரு
கொடம் எடுத்தேன்-நான்
தாள மரம்
சாயலியே-என்
தயிரு
கொடம் சாஞ்சிருச்சே
பால மரத்தாண்ட
பாலு கொடம்
எடுத்தேன் நான்
பால்
மரம் சாயலியே-என்
பாலு கொடம் சாஞ்சிருச்சே
வட்டார வழக்கு: அமிஞ்சிச்சே-அணைந்துவிட்டதே
;
அமியிலியே-அணையலையே
; சாஞ்சிருச்சே-சாய்ந்து
விட்டதே
; கொடம்-குடம்.
|
சேகரித்தவர்
:
கவிஞர் சடையப்பன் |
இடம்:
அரூர், தருமபுரி மாவட்டம். |
|