பூசை முடிஞ்சு போச்சோ

கணவன் இறந்து விட்டான். மனைவி அவனுடைய பழக்க வழக்கங்களைச் சொல்லி அழுகிறாள். அவன் காலையில் குளித்து மிக ஆசாரமாக பலகையில் அமர்ந்து பூசை செய்வான். விரதங்கள் அனுஷ்டிப்பான்.

அவற்றை நினைத்துப் பொருமியவளாய்த் துக்கம் தாளாமல் ‘பூசை முடிந்துவிட்டதென்று பொன்னு ரதம் ஏறி விட்டீர்களோ? தவசு முடிந்து விட்டதென்று தங்க ரதம் ஏறி விட்டீர்களோ?’ என்று கூறிப் புலம்புகிறாள்.

பொன்னு விசுப்பலகை
பூசப் பொன்னா ஆசாரம்-உங்களோட
பூசை முடிஞ்சு போச்சோ
பொன்னு ரதம் ஏறினீங்க
தங்க விசுப்பலகை
தவசு பண்ணும் ஆசாரம்-உங்களோட
தவசு முடிஞ்சிடுச்சோ?
தங்க ரதம் ஏறினீங்க

குறிப்பு: பொன் ரதம், தங்க ரதம்-இறந்து போனவர்கள் அதில் ஏறிச் செல்வதாகக் கற்பனை.

சேகரித்தவர் :
கவிஞர் சடையப்பன்

இடம்:
சேலம் மாவட்டம்.