பக்கம் எண்: - 250 -

பள்ளு முதலியவை

பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கதில் சின்னதம்பிப் புலவர், பள்ளு என்ற வகையைச் சார்ந்த நாடகநூல் இயற்றினார். அதில் உள்ள பாட்டுகள் பலவும் சுவையானவை. நாட்டுப்பாடல் முறையை ஒட்டிப் பாடியபோதிலும், புலவர்கள் போற்றத்தக்க இலக்கிய நயத்துடன் பாடியுள்ளார். தமிழ்நாட்டில் பள்ளு இலக்கியம் வளர்த்த காலத்தில், இலங்கையில் பள்ளு இலக்கியம் படைத்தார் அவர்.

பக்திப் பாடல்களும் வேறு பல தத்துவப் பாடல்களும் பாடியவர் முத்துக்குமார கவிராயர். அவர் விருத்தம் பாடுவதில் வல்லவர். மாணிக்கவாசகர், தாயுமானவர் ஆகியோரின் நடையை அவர் இயற்றிய பாட்டுகளில் காணலாம்.

தமிழ்நாட்டில் குறவஞ்சி நாடகப் பாடல்கள் பெருகிய காலத்தில் இலங்கையிலும் அவ்வகை இலக்கியம் வளர்ந்து. சேனாதிராய முதலியார் நல்லைக் குறவஞ்சி என்னும் சுவையான இலக்கியம் தந்தார்.

ஆறுமுக நாவலர்

யாழ்ப்பாணத்துத் தமிழறிஞருள் சிறப்பிடம் பெற்று விளங்கியவர் ஆறுமுக நாவலர் (கி.பி. 1822 - 1889). அவர் சிலகாலம் தமிழ்நாட்டுக்கு வந்து சென்னையில் தங்கித் தமிழத் தொண்டு செய்ததும் உண்டு. சைவ சமயப் பற்று மிகுந்த அவர், பெரிய புராணம் முதலான நூல்கள் பரவுவதற்குப் பெரும் பணி புரிந்தார். சென்ற நூற்றாண்டில் தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்ப்பதிலும் ஆங்கில நூல்களைத் தமிழில் மொழிபெயர்ப்பதிலும் வல்லவராக விளங்கினார். பைபிலின் தமிழ் மொழிபெயர்ப்புக்குப் பெருந்துணையாக இருந்து செம்மைப்படுத்தியவர் என்பர். பலர் தமிழ் நூல்கள் படிக்குமாறு பாடசாலை ஏற்படுத்தியதோடு, அவர்களுக்குத் தேவையான பாட நூல்களை அச்சிட்டுத் தருவதற்கு அச்சகமும் வைத்து நடத்தினார். அவற்றை நடத்துவதற்கு ஆகும் பணத்திற்கு வீடு வீடாகச் சென்று அரிசிப்பிச்சை எடுத்துத் தமிழ்த் தொண்டு செய்த சான்றோர் அவர். தமிழில் எழுத்துப் பிழை இல்லாமல் நூல்களை அச்சிட்டுத் தரும் வகையில் சிறந்த வழி காட்டியாக விளங்கினார். மாணவர்களுக்கு உரிய தொடக்கப் பாடப் புத்தகங்களை எளிய தமிழில் - இலக்கணப் பிழை அற்ற தமிழில் - தாமே எழுதினார். சைவ சமயத்தை விளக்கிக் கூறும் நூல்களை இயற்றினார். இலக்கணத்தை எளிதில் கற்பதற்கு உதவும் நூல்களும் எழுதினார். பெரிய புராணம், திருவிளையாடற் புராணம் ஆகிய செய்யுள் நூல்களை உரைநடையில் எழுதிப் பலர்க்கும் பயன்படுமாறு செய்தார். வேறு சில செய்யுள் நூல்களுக்கும் நன்னூலுக்கும் உரை எழுதினார். சென்ற ஆண்டில்