| அவர். இங்கும் அங்கும் சிறு கோடுகளை இழுத்து, அவற்றாலேயே
பொருள்பொதிந்த ஓவியங்களைத் தீட்டிக் காட்டவல்லவர் போல், சிறு சிறு வாக்கியங்களாலேயே
கதைமாந்தர்களின் பண்புகள் விளங்குமாறு செய்து விடுகின்றார். முஸ்லிம் குடும்பக் கதையை
அவர்களின் அரபுச் சொற்கள் கலந்த பேச்சுமொழியிலும், கிறிஸ்தவர்பற்றிய கதையைக்
கிறிஸ்தவ மதச் சார்பான பிறமொழிச் சொற்கள் கலந்த நடையிலும் எழுதியுள்ள திறம்
பாராட்டத்தக்கதே.
கே. எஸ். மகேசன் என்பவர், எச். ஜீ. வெல்ஸ் முதலான
ஐரோப்பிய எழுத்தாளர்களின் முறையைப் பின்பற்றி ‘அந்தரத்தீவு’ என்ற நாவலைப் படைத்துள்ளார்.
இலங்கையில் தோன்றிய முதல் விஞ்ஞான நாவல் அது.
இலங்கையில் பேசப்படும் தமிழ் தமிழகத் தமிழிலிருந்து
சிறிதுசிறிதாக வேறுபட்டுவருகிறது. சில சொற்களுக்குப் பொருளே வேறுபடுகிறது. சில வினைமுற்றுகளின்
வழக்கும் மாறியுள்ளது. ஆகையால், இலங்கை நாவல்களிலும் கதைகளிலும் உள்ள தமிழ் நடையும்,
தமிழ்நாட்டுக் கதைகளின் நடையும் ஒன்றாக இல்லை. உரையாடல்களைப் பொறுத்தவரையில்
அந்த வேறுபாடு மிகுதியாக உள்ளது.
கவர்ச்சியும் புதுமையும் விறுவிறுப்பும் உள்ள பல சிறுகதைகளை
எழுதி அவற்றைப் பல தொகுப்பாக்கித் தந்தவர் செ. கணேசலிங்கம். அவர் எழுதியுள்ள
நாவல்கள், புரட்சியான கருத்துகள் கொண்டவை; பொதுவுடைமைச் சமுதாயத்தைப் போற்றி
இக்காலத்து முதலாளி தொழிலாளிப் போராட்டத்தை எடுத்துரைத்து இன்றைய வாழ்வில் உள்ள
இழிநிலைகளை அம்பலப்படுத்துகின்றவை. அவருடைய எழுத்துகளில் இந்த அரசியல் நோக்கு
மிகுதியாக இருக்கக் காணலாம். ‘செவ்வானம்’ என்ற நாவலில், ஒரு தொழிலாளியைக் கதைத்
தலைவனாகப் படைத்து வாழ்க்கைப் போராட்டத்தையும் அரசியல் போக்கையும் விளக்கியுள்ளார்.
‘நீண்ட பயணம்’ என்ற நாவலில், கிராமத்தில் வாழும் தாழ்த்தப் பட்ட மக்களின்
நிலையும், மேல்சாதியார் அவர்களுக்குச் செய்யும் கொடுமையும் எடுத்துக் கூறப்படுகின்றன.
காந்தியடிகளின் இயக்கத்தால் தீண்டாமை இந்திய நாட்டில் செல்லாக் காசு ஆக்கப்பட்டது.
ஆனால் அந்தக் கொடுமை இன்னும் இலங்கைத் தமிழரிடையே இருந்துவருவது கண்டு கொதிப்புற்ற
நெஞ்சோடு ஆசிரியர் இந்த நாவலை எழுதியுள்ளார். படித்த தமிழர் மிகுதியாக வாழும்
பகுதியில், கோயில்களில் சில சாதியார் நுழையக் கூடாது என்று தடுக்கும் கொடுமையை,
உள்ளது உள்ளவாறே படைத்துக் காட்டியுள்ளார். தாழ்த்தப்பட்ட இனத்தாரிடையே பிறந்து
வளர்ந்த செல்லத்துரை, புரட்சி செய்ய முற்படுகிறான். “சாமிக்கு எங்களுடைய தண்ணீர்கூடத்
தீட்டு
|