XVII

பின்னாளில்    தந்தை   பெரியார் காமராசரை   ஆதரிப்பதாகச்
சொல்லிக்கொண்டு காங்கிரஸ் இயக்கத்தில்    இருக்கும்   மொழி, இன
உணர்வுகள் அற்றவர்களையும் ஊழல் பேர்வழிகளையும் ஆதரிப்பதைப்
பாரதிதாசன்    விரும்பவில்லை. எனவே          தந்தை பெரியாரின்
அணுகுமுறையைக் கண்டித்துக்   ‘ கூலித் தொண்டு கூடாது ’ ( குயில்,
கி.இ.10.1.61) என்ற தலையஙகக் கட்டுரையை எழுதினார்.

பாரதிதாசன்     திராவிடர் கழகச் சார்பாளராக இருந்தாரே தவிர
அவ்வியக்கத்தில்   உறுப்பினராக இல்லை. எனவே அவர் நினைத்ததை
எழுத முடிந்தது .

3. பாரதிதாசன் தொடக்கத்தில் பொதுவுடைமைக் கோட்பாடுகளில்
ஈடுபாடு    கொண்டவராக   விளங்கினார் .     பிற்காலத்தில் இந்தியப்
பொதுவுடைமை இயக்கத்தின் , நடைமுறைச்   செயல்பாடுகளைக் கண்டு
கசப்புற்றார் .  குறிப்பாகப் புதுவை மாநிலப் பொதுவுடைமை இயக்கத்தின்
மீதும் , அவ்வியக்கத்தின் தலைவர் திரு. சுப்பையா மீதும் வெறுப்புற்றார்.

‘கம்முய்னிசிட்டுகளை விட்டு வைக்கக்
கூடாது’ (குயில், கி.இ. 26-1-60)
‘சுப்பையாவை விட்டு வைப்பது
தப்பையா’ (குயில், கி.இ. 2-2-60)
‘நடவடிக்கை எடுக்க வேண்டாமா?’
(குயில், கி.இ. 16-2-60)
‘சப்பான் வழி தப்பானது’
(குயில், கி.இ. 28-6-60)

முதலிய தலையங்கக்    கட்டுரைகள்   அவருடைய  பொதுவுடைமைக்
கோட்பாட்டின் நிலையினை உணர்த்துகின்றன.

4. திராவிட    கழகத்தின்     தூண்களில் ஒருவரும் ‘விடுதலை’
நாளிதழின் ஆசிரியருமான      ‘ குத்தூசி ’  குருசாமி பாரதிதாசனின்
பேனாமுனைத்