உதவு என்ற பூட்கை உரையை எங்கட்குத் தந்தவர். என்னுடைய இத் தமிழ்ப்பணிக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து என்னை இயக்கிய பெருமக்களுள் முதன்மையானவர்; முதுமைப் பருவத்திலும் கண்களிலும், கைகளிலும் வலியும் சோர்வும் ஏற்படும் அளவிற்கு உழைத்து மெய்ப்புப் பார்த்துத் திருத்தம் செய்து நூல்கள் செப்பமுற வருவதற்குக் கரணியமாக இருந்தவர். பாவாணர் நூல்கள் மறுபதிப்புப் பணியில் ஏறத்தாழ ஓராண்டுக் காலமாகக் கணப்பொழுதும் சோராது, நூல்கள் அனைத்தையும் எழுத்தெண்ணிப் படித்துத் திருத்தங்கள் செய்து இப் பணிக்காகத் தம்மை ஈகம் செய்த மாமா பெரும்புலவர் நக்கீரர் அவர்களின் உழைப்பும், வழிகாட்டுதலும் என் வாணாளில் எனக்குக் கிடைத்த பேறாகக் கருதுகிறேன். என் வாழ்நாள் முழுவதும் இப் பெருமகனார்க்கு நன்றிக் கடப்பாடுடையேன்.

தனித்தமிழ் இயக்க முன்னோடிகள்

முனைவர் தமிழ்க்குடிமகனார், முனைவர் இரா.இளவரசு, முனைவர் பூங்காவனம், புலவர் இரா.இளங்குமரனார், முனைவர் திருமாறன், முனைவர் இளமுருகன், முனைவர் ந.அரணமுறுவல், குடந்தைக் கதிர். தமிழ்வாணன், போன்ற பெருமக்கள் மொழிஞாயிறு பாவாணர் நூல்கள் வெளிவருவதற்கு எனக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து எனக்குத் துணையாயிருந்த பெருமக்களாவர். இவர்களின் தமிழ்மொழி, இன, நாட்டுணர்வுக்குத் தலைவணங்கி என் நன்றியை அவர்களுக்கு இந்த நேரத்தில் உரித்தாக்கிக் கொள்கிறேன்.

நூல்களுக்கு அறிமுகவுரை அளித்த பெருமக்கள்

அயராது தம் பணிநெருக்கடிகளுக்கிடையிலும் மொழிஞாயிறு பாவாணர் அவர்களின் அரிய கட்டுரைத் தொகுப்புகள் ஒவ்வொன்றிற்கும் அறிமுகவுரை வழங்கி தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமைசேர்த்த பெருமக்கள் அனைவருக்கும் தமிழ்மண் பதிப்பகச் சார்பில் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.

நூலாக்கப் பணிக்கு உதவியோர்

இக்கட்டுரைத் தொகுப்புகள் வெளிவருவதற்கு எனக்குத் துணையாயிருந்து ஆக்கமும் ஊக்கமும் அளித்து நூல்கள் வடிவமைப்பிலும், திருத்தத்திலும் ஒவ்வொரு நிலையிலும் என்னோடு இருந்து இரவும் பகலும் அயராது உழைத்த அருமை