8
சாத்தியமில்லாதவையாகத்  தோன்றலாம் ; ஆனால்    கபடமற்ற ஒரு
குழந்தைக்கு அவை சாத்தியமானவை.  சத்தியத்தை நாடிச் செல்பவர்,
தூசிக்கும் தூசியாகப் பணிவு கொள்ள   வேண்டும். உலகம் தூசியைக்
காலின்கீழ் வைத்து   நசுக்குகிறது. ஆனால், சத்தியத்தை நாடுகிறவரே,
அத்தூசியும்         தம்மை   நசுக்கும்     அளவுக்குத்  தம்மைப்
பணிவுள்ளவராக்கிக் கொள்ள வேண்டும்.   அப்பொழுதுதான் அதற்கு
முன் அல்ல-ஒளியைக்      கணப்பொழுதாவது       காணமுடியும்.
வசிஷ்டருக்கும்  விசுவாமித்திரருக்கும்  நடந்த    வாக்குவாதம் இதை
மிகத் தெளிவாக்குகிறது. கிறிஸ்தவமும்,   இஸ்லாமும்கூட இதை நன்கு
எடுத்துக் காட்டுகின்றன.

இப்பக்கங்களில் நான்      எழுதப் போவதில் ஏதாவது ஒன்று
தற்பெருமையோடு கூறப்பட்டது  போல் வாசகருக்குத் தோன்றுமாயின்,
என் சத்தியத் தோட்டத்தில்     ஏதோ கோளாறு இருக்கிறது என்றும்,
எனக்குத் தோன்றும் காட்சிகளும்     கானல் நீரைப் போன்றவையே
ஒழிய உண்மையானவை அல்ல        என்றும்தான் அவர் கொள்ள
வேண்டும்.என்னைப் போன்றவர்கள்  நூற்றுக் கணக்கில் அழிந்தாலும்
சரி,         சத்தியம் நிலைக்கட்டும்.    தவறே இழைக்கவல்ல என்
போன்றவர்களின்  தன்மையைக்      கண்டறிவதற்காக, சத்தியத்தின்
பெருமையை மயிரிழையும் குறைத்துவிடாமல் இருப்போமாக.

இனி வரும்     அத்தியாயங்களில்   ஆங்காங்கே காணப்படும்
புத்திமதிகள் அதிகார     பூர்வமானவை    என  யாரும் கருதி விட
மாட்டார்கள்  என்றே      நம்புகிறேன்.அப்படிக் கருதி விடக்கூடாது
என்பதே என் பிரார்த்தனையுமாகும். கூறப்பட்டிருக்கும் சோதனைகளை
உதாரணங்கள் என்றே கொள்ள வேண்டும்.     அவற்றை அனுசரித்து
ஒவ்வொருவரும் தத்தம் நோக்கப்படியும் தகுதிக்கேற்றவாரும்  சொந்தச்
சோதனைகளை மேற்கொள்ளலாம். இந்தக்        குறிப்பிட்ட அளவு
வரையில் இந்த உதாரணங்கள் உண்மையில் பயனுள்ளவையாகும் என
நம்புகிறேன். ஏனெனில்,        சொல்லியாக வேண்டிய  ஆபாசமான
விஷயங்களைக் கூட நான்      மறைக்கப் போவதில்லை; குறைத்துக்
கூறப்போவதில்லை. என்னுடைய          எல்லாக் குற்றங்களையும்,
தவறுகளையும் வாசகருக்கு   அறிவிப்பேன் என்றே நம்புகிறேன். என்
நோக்கம், சத்தியாக்கிரக       சாத்திரத்தில் நடத்திய சோதனைகளை
விவரிப்பதேயன்றி, நான் எவ்வளவு நல்லவன் என்பதைச் சொல்லுவது
அன்று. என்னுடைய       நன்மை, தீமைகளை      மதிப்பிடுவதில்
சத்தியத்தைப் போல அதிகக் கண்டிப்பாக