அவர்கள் சிந்திய இரத்தத்தையும் பின்னர் அச்சமூகங்கள்
மறைந்ததையும் நூலாசிரியர் விளக்கியுள்ளார். (பக்.321/327)

9. வடமொழியின் செல்வாக்கினால் வடமொழியும் தமிழ் மொழியும்
கலந்து எழுதப்பட்ட மணிப்பிரவாள நடை உருவாயிற்று. அந்நடை
காலப்போக்கில் செப்புப்பட்டயத்திலும் இடம் பெற்றது. இரண்டாம்
சிம்மவர்மனின் (கி.பி. 550) ஆறாம் ஆட்சி ஆண்டில் அளிக்கப்பட்ட
பள்ளன்கோயில் செப்புப் பட்டயம் வடமொழியும் தமிழ் மொழியும்
கலந்து மணிப்பிரவாள நடையில் அமைந்த முதல்
செப்புப்பட்டயமாகும். (ப.6)

10. இரண்டாம் நரசிம்மவர்மன் இராசசிம்மன் (கி.பி. 625-722)
காலத்தில் உள்ள கல்வெட்டுகள் அனைத்தும் சமசுகிருத மொழியில்
பொறிக்கப்பட்டன (ப.197). தமிழ் மண்ணை ஆண்ட பல்லவ மன்னன்
தமிழைப் புறக்கணித்து விட்டுச் சமசுகிருதத்தின்பால் கொண்டிருந்த
மிகப் பெரிய ஈடுபாட்டை இக்கல்வெட்டுகள் வழி உணரலாம்.

11. இன்று நமக்குக் கிடைக்கின்ற தமிழ் நூல்களில் மிகவும்
தொன்மை வாய்ந்தது தொல்காப்பியம். வடமொழி இலக்கண நூலான
பாணினிக்கும் முற்பட்டது. தொல்காப்பியத்தில் வடமொழிச் சொற்கள்
தமிழில் எவ்வாறு வழங்க வேண்டும் என்ற குறிப்பு இருப்பதால்
தொல்காப்பியத்திற்கு முன்னரே வடமொழியாளர்கள் தமிழகத்திற்கு
வந்து குடிபுகுந்தனர் எனலாம். கி.மு. 2ஆம் நூற்றாண்டில் அல்லது
கி.மு. முதல் நூற்றாண்டில் தொல்காப்பியம் எழுதப்பட்டிருக்கலாம்.
(ப.103)

12. ‘ஐயர்’ என்பது சாதிப் பெயரன்று. ஐயர் என்பதற்குச்
‘சான்றோர்’ என்று பொருள். ஐயர் - ஆண்பால், ஐயை - பெண்பால்.
நூலாசிரியர் இச்சொல்லின் உண்மைப் பொருளைத் தேவாரப்
பாடல்கள், பெரியபுராணம், கல்வெட்டுகள் ஆகியவற்றின்வழிச்
சான்றுகள் காட்டி நிறுவியுள்ளார். மிகவும் பிற்பட்ட காலத்தில் ஐயர்
என்பது சாதிப் பெயராக வழக்குப் பெற்றது. (ப.98)

13. பரத நாட்டியம் தமிழர் ஆடல் கலையாகும். ‘சமசுகிருத
நாடகமும் அதன் தோற்றமும் மறைவும்’ எனும் நூலை எழுதிய
இந்துசேகர் என்பார் தமிழகத்தில் பரதர் எனும்