இரண்டாம் பதிப்புரை
‘மலையருவி’ என்னும் தலைப்பில் வெளிவந்த நாடோடிப் பாடல்களின் இரண்டாம் பதிப்பை
பொதுமக்களின் விருப்பத்திற்கிணங்க விரைந்து வெளியிட்டுள்ளோம். முதற்பதிப்பில் உள்ளபடியே
மாற்றங்கள் ஏதும் செய்யாமல் இப்பதிப்பு வெளியிடப்படுகிறது.
இந்நூலை நன்முறையில் குறித்த காலத்தில் கவினுற அச்சிட்டுத் தந்த குடந்தை ஜெமினி அச்சக உரிமையாளர்
அவர்களுக்கும் செம்மையாக வெளிவரத் துணைபுரிந்த சரசுவதி மகால் நூலக அலுவலர்கட்கும் கனிந்த உள்ளத்தோடு
நன்றி கூறிப் பாராட்டுகின்றோம்.
அறிஞர் பெருமக்கள் படித்துப் பயனுற்று ஆதரவு தருவார்களாக.
தஞ்சாவூர்
4-9-1975 |
} |
அ. வடிவேலன் |
கௌரவ காரியதரிசி. |
சரசுவதி மகால் நூல்நிலையம். |
|