ஒரு மொழி வளர்ச்சியடைய வேண்டுமானால் அந்த மொழியில் பல துறைகளிலும் சிறந்த பல நூல்கள் தோன்ற வேண்டும். எவ்வளவு நல்ல நூல்கள் தோன்றுகின்றனவோ அவ்வளவும் மொழி வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். இந்த முறையில் தமிழ் மொழியின் மேன்மைக்கு இந்நூல் ஒருசிறு தொண்டாக இருக்கும் என்று கருதுகிறேன்.

தங்களுடைய சொந்த மத நூல்களையும் கற்க வேண்டும், ஏனைய மத நூல்களைப் படிக்கக்கூடாது என்பது குறுகிய நோக்கமாகும். தங்களுடைய சொந்த மத நூல்களைக் கற்பதோடு மட்டும் அமையாமல் நமது நாட்டிலுள்ள ஏனைய மதநூல்களையும் கற்பது சிறந்ததாகும். நம்முடைய தேசத்திலே தோன்றி, உலகப் புகழ் படைத்த ஒரு பெரிய மதத்தை அமைத்து, இறவாப் புகழ்பெற்ற பகவன் கௌதம புத்தரின் வாழ்க்கை வரலாற்றை அறிய வேண்டியது எல்லோருஐடய கடமையும் அவசியமும ஆகும். புத்தரின் வாழ்க்கையையும் அவருடைய போதனைகளையும் அறிவதற்கு இந்நூல் பயன்படும் என்பதில் ஐயமில்லை.

இந்த நூலை இரண்டாம் பதிப்பாக அச்சிட்டு வெளியிட்ட சென்னை சாந்தி நூலகத்தாருக்கு என்னுடைய நன்றியுரியது.

சென்னை - 4                                                                                        இங்ஙனம்

10-3-1969                                                                                மயிலை சீனி. வேங்கடசாமி