முகப்பு | தொடக்கம் |
தமிழியல் ஆய்வு : மயிலை சீனி.வேங்கடசாமி அவர்கள் 1958இல் அஞ்சிறைத்தும்பி என்னும் தலைப்பில் நூலொன்றை வெளியிட்டார். இதில் சுமார் முப்பது சொற்கள் குறித்த ஆய்வை மேற் கொண்டிருக்கிறார். தமிழ்ச் சூழலில் சொல் ஆராய்ச்சி என்பது பலராலும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் ஓர் ஆய்வுத்துறை ஆகும். இதில் தம்மையும் மயிலை சீனி. இணைத்துக் கொண்டிருப்பதைக் காணமுடிகிறது. இவ்வகையான சொல்லாய்வுகள் மூலம் பல்வேறு பண்பாட்டு நிகழ்வுகள் குறித்து அறிய முடிகிறது. குறிப்பிட்ட ஒரு சொல், எந்தச் சூழலில் எந்தப் பொருளில், எப்படிப் பயன்படுத்தப்படுகிறது என்ற உரையாடல் சுவையானது. பல்வேறு புதிய புதிய விளக்கங்களை அதன் மூலம் பெற முடிகிறது. எடுத்துக்காட்டாக, மாடு என்ற சொல் குறித்து மயிலை சீனி. அவர்கள் செய்துள்ள ஆய்வு பின்வருமாறு அமைகிறது. |
மேல் | அடுத்த பக்கம் |