| முகப்பு | தொடக்கம் |
|
காண்கிறோம். ஏனெனில் இந்நாடகம் உருவான காலங்களில் பேச்சு மரபை முதன்மைப்படுத்திய விலாச நாடகங்களும் உருவாகிவிட்டன. அத்தன்மையை இந்நூல் கணக்கில் எடுத்துக்கொண்டதாக அறியமுடிய வில்லை. எனவே மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை அவர்கள் தத்துவத்துறையில் புலமை மிக்கவர் என்பது உண்மை. ஆனால் அத்தத்துவத்தை இந்நாடகத்தின் வழி வெளிப்படுத்த அவர் மேற்கொண்ட முயற்சி முழுமையான நாடகமாக இப்பிரதி அமையும் வாய்ப்பை தடைசெய்கிறது எனலாம். இந்நூலுக்கு மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் விரிவான குறிப்புரை எழுதியிருப்பதைக் காண்கிறோம். இக்குறிப்புரை நாடகத்தைப் புரிந்து கொள்வதற்குப் பெரிதும் உதவுகின்றது. இத்தொகுப்புகள் உருவாக்கத்தில் தொடக்க காலத்தில் உதவிய ஆய்வாளர்கள் மா. அபிராமி, ப. சரவணன் ஆகியோருக்கும் இத்தொகுதிகள் அச்சாகும் போது பிழைத்திருத்தம் செய்து உதவிய ஆய்வாளர்கள் வி. தேவேந்திரன், நா. கண்ணதாசன் ஆகியோருக்கும் நன்றி. சென்னை - 96
வீ. அரசு
|
| மேல் | அடுத்த பக்கம் |