இளம்பூரணர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   35
Zoom In NormalZoom Out


 

த்தின்மேல் நின்றது.

உதாரணம்

"உய்ந்தொழிவார் ஈங்கில்லை ஊழிக்கண் தீயேபோல்
முந்தமருள் ஏற்றார் முரண்முருங்கத் - தந்தமின்
ஒற்றினான் ஓற்றி உரவோர் குறும்பினைச்
சுற்றினார் போகாமற் சூழ்ந்து."           (புறப்.வெட்சி.7)

முற்றிய ஊர்கொலை - (அவ்வாறு)  சூழப்பட்ட   ஊரை அழித்தல்.

உதாரணம்

"இகலே துணையா எரிதவழச் சீறிப்
பகலே அரிதென்னார் புக்குப் - பகலே
தொலைவில்லார் வீழத் தொடுகழல் ஆர்ப்பக்
கொலைவில்லார் கொண்டார் குறும்பு.     (புறப்.வெட்சி.8)

ஆ கோள் - (ஆண்டுளதாகிய) நிரையைக் கோடல்.

உதாரணம்

"கொடுவரி கூடிக் குழூஉக்கொண் டனைத்தால்
நெடுவரை நீள்வேய் நரலும் - நடுவூர்க்
கணநிரை கைக்கொண்டு கையகலார் நின்ற
நிணநிரை வேலார் நிலை."              (புறப்.வெட்சி.9)

பூசல்  மாற்று  - (அவ்வாறு கொண்ட நிரையை மீட்டற்கு வந்தார்
பொரும்) பூசல் மாற்றிப் பெயர்தல்.

உதாரணம்

"சூழ்ந்த நிரைபெயரச் சுற்றித் தலைக்கொண்டார்
வீழ்ந்தனர் வீழ்ந்தார் விடக்குணிய - தாழ்ந்த
குலவுக் கொடுஞ்சிலைக்கைக் கூற்றனையார் எய்த
புலவுக் கணைவழிபோய்ப் புள்."         (புறப்.வெட்சி.10)

நோய்    இன்று  உய்த்தல்  -  (அவ்வாறு  கொண்ட  நிரையை)
வருந்தாமல உய்த்தல்.

உதாரணம்

"செருப்பிடைச் சிறுபரல் அன்னன் கணைக்கால்
அவ்வயிற்று அகன்ற மார்பிற் பைங்கண்
குச்சின் நிரைத்தன்ன குரூஉமயிர் மோவாய்ச்
செவியிறந்து தாழ்தருங் கவுளன் வில்லோ
டியார்கொலோ அளியன் தானே தேரின்
ஊர்பெரிது இகந்தன்றும் இலனே அரணெனக்
காடுகைக் கொண்டன்றும் இலனே காலைப்
புல்லார் இனநிரை செல்புற நோக்கிக்
கையிற் சுட்டிப் பையென எண்ணிச்
சிலையின் மாற்றி யோனே அவைதாம்
மிகப்பல வாயினும் என்னாம் எனைத்தும்
வெண்கோள் தோன்றாக் குழிசியொடு
நாளுறை மத்தொலி கேளா தோனே."          (புறம்.257)

நுவல்வழித்   தோற்றம் -  தமர்       கவன்று [சொல்லியவழித்] தோன்றுதல்.

உதாரணம்

"நறவுந் தொடுமின் விடையும் வீழ்மின்
பாசுவல் இட்ட புன்கால் பந்தர்ப்
புனல்தரும் இளமணல் நிறையப் பெய்ம்மின்
ஒன்னார் முன்னிலை முருக்கிப் பின்நின்று
நிரையொடு வரூஉம் என்னைக்
குழையோர் தன்னினும் பெருஞ்சா யலரே,"      (புறம்.262)

தந்து      நிறை   -  (கொள்ளப்பட்ட நிரையைத்)  தம்ஊரகத்துக்
கொணர்ந்து நிறுத்தல்.

உதாரணம்

"தண்டா விருப்பினள் தன்னை தலைமலைந்த
வண்டார் கமழ்கண்ணி வாழ்கென்று - கண்டாள்
அணிநிரை வாள்முறுவல் அம்மா எயிற்றி
மணிநிரை மல்கிய மன்று."              (புறப்.வெட்சி.13)

பாதீடு - (அந்நிரையைக் ) கூறிடுதல்.

உதாரணம்

"ஒள்வாள் மலைந்தார்க்கும் உற்றாய்ந் துரைத்தார்க்கும்
புள்வாய்ப்பச் சொன்ன புலவர்க்கும் - விள்வாரை
மாறட்ட வென்றி மறவர்தஞ் சீறூரில்
கூறிட்டார் கொண்ட நிரை."             (புறப்.வெட்சி.14)

உண்ட ஆட்டு - (நிரைபகுத்த  மறவர்)    களிப்பினால்   அயரும்
விளையாட்டு.

உதாரணம்

"இனிகொண்ட தீஞ்சொல் இளமா எயிற்றி
களிகொண்ட நோக்கம் கவற்றத் - தெளிகொண்ட
வெங்கண் மலிய விளிவதுகொல் வேற்றார்மேல்
செங்கண் மறவர் சினம்."
               (புறப்.வெட்சி.15)

கொடை - (பகுத்தநிரையை வேண்டி இரப்பார்க்குக்) கொடுத்தல்.

உதாரணம்

"இளமா எயிற்றி இவைகாண் நின்ஐயர்
தலைநாளை வேட்டகத்துத் தந்தநல் ஆநிரைகள்
கொல்லன் துடியன் கொளைபுணர்சீர் வல்ல
நல்லியாழ்ப் பாணர்தம் முன்றில் நிறைந்தன.
முருந்தேர் இளநகை காணாய்நின் ஐயர்
கரந்தை அலறக் கவர்ந்த நிரைகள்

கள்விலை யாட்டிநல் வேய்திரி கானவன்  புள்வாய்ப்பச்  சொல்கணி
முன்றில் நிறைந்தன.

கயமலர் உண்கணாய் காணாய்நின் ஐயர்
அயலூர் அலற எறிந்தநல் ஆக்கள்
நயனின் மொழியர் நரைமுதிர் தாடி
எயினர் எயிற்றியர் முன்றில் நிறைந்தன."
                                (சிலப்.வேட்டுவவரி)

62. மறங்கடைக் கூட்டிய குடிநிலை சிறந்த
 கொற்றவை நிலையும்அத்திணைப் புறனே.

இதுவும் அது.

மறம் கடை கூட்டிய குடி நிலை - மறத்தொழில் முடித்தலை