இளம்பூரணர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   40
Zoom In NormalZoom Out


 

வேந்தன் அஞ்சுதகத் தலைச்சென்று அடல் குறித்தது.

ஒழியாத மண்ணை நச்சுதலாவது, வேண்டிய அரசர்க்குக் கொடாமை.
"அகத்திணை  மருங்கின்   அரில்தப  உணர்ந்தோர், புறத்திணை
இலக்கணம் திறப்படக் கிளப்பின்."  [புறத்.    1]
   என்பதனைக்
கொணர்ந்து    உரைத்துக்கொள்க.     இவ்வுரை     இனி  வருகின்ற
திணைக்கும் ஒக்கும்.அதற்கு  இது  புறனாகியவாறு    என்னையெனின்,
"மாயோன் மேய காடுறை யுலகமும்'  [அகத்.  5]     கார்காலமும்
முல்லைக்கு  முதற்பொருளாதலானும், பகைவயிற் சேறலாகிய  வஞ்சிக்கு
நிழலும்    நீருமுள்ள   காலம்   வேண்டுதலானும், பருமரக் காடாகிய
மலைசார்ந்த இடம் ஆகாமையானும் அதற்கு இது சிறந்த தென்க.
அன்னதாகல் முல்லைப்பாட்டினுள்,

"கான்யாறு தழீஇய அகல்நெடும் புறவில்
சேண்நாறு பிடவமொடு பைம்புதல் எருக்கி
வேட்டுப்புழை அருப்பம் மாட்டிக் காட்ட
இடுமுட் புரிசை ஏமுற வளைஇப்
படுநீர்ப் புணரியிற் பரந்த பாடி"       (முல்லைப். 24-28)

என்பதனாலும் அறிக.                                   (6)

65. இயங்குபடை அரவம் எரிபரந்து எடுத்தல்
வயங்கல் எய்திய பெருமை யானும்
காடுத்தல் எய்திய கொடைமை யானும்
அடுத்தூர்ந்து அட்ட கொற்றத் தானும்
மாராயம் பெற்ற நெடுமொழி யானும்
பொருள் இன்று உய்த்த பேராண் பக்கமும்
வருவிசைப் புனலைக் கற்சிறை போல
ஒருவன் தாங்கிய பெருமை யானும்
பிண்ட மேய பெருஞ்சோற்று நிலையும்
வென்றோர் விளக்கமுந் தோற்றோர் தேய்வும்
குன்றாச் சிறப்பிற் கொற்ற வள்ளையும்
அழிபடை தட்டோர் தழிஞ்சியொடு தொகைஇக்
கழிபெருஞ் சிறப்பின் துறைபதின் மூன்றே.

இது, வஞ்சித்திணையாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இயங்குபடை      அரவம்     முதலாகத்   தழிஞ்சியொடு  கூடச்
சொல்லப்பட்ட பதின்மூன்றும் வஞ்சித்துறையாம் என்றவாறு.

'பெருமை   யானும்'  என்பது  முதலாக  வந்த   'ஆன்'  எல்லாம்
இடைச்சொல்லாகி வந்தன. இயங்குபடை   அரவம்   எரிபரந்தெடுத்தல்
என்பதன்கண் உம்மை தொக்கு நின்றது.

படை இயங்கு அரவம் - படையெழும் அரவம்.

உதாரணம்

"சிறப்புடை மரபின் பொருளு மின்பமும்
அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல
இருகுடை பின்பட ஓங்கிய ஒருகுடை
உருகெழு மதியின் நிவந்துசேண் விளங்க
நல்லிசை வேட்டம் வேண்டி வெல்போர்ப்
பாசறை யல்லது நீஒல் லாயே
நுதிமுக மழுங்க மண்டி ஒன்னார்
கடிமதில் பாயுநின் களிறடங் கலவே
போரெனிற் புகலும் புனைகழல் மறவர்
காடிடைக் கிடந்த நாடுநனி சேய
செல்வேம் அல்லேம் என்னார் கல்லென்
விழவுடை யாங்கண் வேற்றுப்புலத் திறுத்துக்
குணகடல் பின்னது ஆகக் குடகடல்
வெண்தலைப் புணரிநின் மான்குளம்பு அலைப்ப
வலமுறை வருவதும் உண்டென்று அமைந்து
நெஞ்சுநடுங்கு அவலம் பாயத்
துஞ்சாக் கண்ண வடபுலத் தரசே"            (புறம் .31)

எரி பரந் தெடுத்தல் -(பகைவரது நாடு) எரி பரந்து கிளர்தல்.

உதாரணம்

"வினைமாட்சிய விரைபுரவியொடு
மழையுருவின தோல்பரப்பி
முனைமுருங்கத் தலைச்சென்றவர்
விளைவயல் கவர்பூட்டி
மனைமரம் விறகாகக்
கடுதுறைநீர்க் களிறுபடீஇ
எல்லுப்பட விட்ட சுடுதீ விளக்கம்
செல்சுடர் ஞாயிற்றுச் செக்கரின் தோன்றப்
புலங்கெட இறுக்கும் வரம்பில் தானைத்
துணைவேண்டாச் செருவென்றிப்
புலவுவாட் புலர்சாந்தின்
முருகற் சீற்றத் துருகெழு குருசில்
மயங்கு வள்ளை மலர் ஆம்பல்
பனிப்பகன்றைக் கனிப்பாகல்
கரும்பல்லது காடறியாப்
பெருந்தண்பணை பாழாக
ஏம நன்னாடு ஒள்எரி ஊட்டினை
நாம நல்லமர் செய்ய
ஓராங்கு மலைந்தன பெருமநின் களிறே".        (புறம்.16)

வயங்கல் எய்திய பெருமையும் - விளக்கம் எய்திய பெருமையும்

உதாரணம்

"இருங்கண் யானையொடு அருங்கலந் தெறுத்துப
பணிந்துகுறை மொழிவ தல்லது பகைவர்
வணங்கார் ஆதல் யாவதோ மற்றே
உருமுடன்று சிலைத்தலின் விசும்பதிர்ந் தாங்கு
கண்ணதிர்பு முழங்குங் கடுங்குரல் முரசம்
கால்கிளர்ந் தன்ன ஊர்தி கான்முளை
நீர்துனைந் தன்ன செலவின்