இளம்பூரணர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   44
Zoom In NormalZoom Out


 

களைக வாழி வளவ என்றுநின்
முனைதரு பூசல் கனவினும் அறியாது
புலிபுறங் காக்குங் குருளை போல
மெலிவில் செங்கோல் நீபுறங் காப்பப்
பெருவிறல் யாணர்த் தாகி அரிநர்
கீழ்மடைக் கொண்ட வாளையும் உழவர்
படைமிளிர்ந் திட்ட யாமையும் அறைநர்
கரும்பில் கொண்டதேனும் பெருந்துறை
நீர்தரு மகளிர் குற்ற குவளையும்
வன்புலக் கேளிர்க்கு வருவிருந்து அயரும்
மென்புல வைப்பின் நன்னாட்டுப் பொருந
மலையின் இழிந்து மாக்கடல் நோக்கி
நிலவரை இழிதரும் பல்யாறு போலப்
புலவர் எல்லாம் நின்நோக் கினரே
நீயே, மருந்தில் கணிச்சி வருந்தவட் டித்துக்
கூற்று வெகுண்டு அன்ன முன்பொடு
மாற்றுஇரு வேந்தர் மண்நோக்கினையே."        (புறம்.42)

உள்ளியது     முடிக்கும்    வேந்தனது  சிறப்பும்  -  நினைத்தது
முடிக்கலாகும் வேந்தனது சிறப்பும்.

உதாரணம்

"அடுநை ஆயினும் விடுநை ஆயினும்
நீ அளந்து அறிதிநின் புரைமை வார்கோல்
செறியரிச் சிலம்பில் குறுந்தொடி மகளிர்
பொலஞ்செய் கழங்கின் தெற்றி ஆடும்
தண் ஆன் பொருநை வெண்மணல் சிதையக்
கருங்கைக் கொல்லன் அரஞ்செய் அவ்வாய்
நெடுங்கை நவியம் பாய்தலின் நிலையழிந்து
வீகமழ் நெடுஞ்சினை புலம்பக் காவுதொறும்
கடிமரந் தடியும் ஓசை தன்னூர்
நெடுமதில் வரைப்பின் கடிமனை இயம்ப
ஆங்கினிது இருந்த வேந்தனோடு ஈங்குநின்
சிலைத்தார் முரசம் கறங்க
மலைத்தனை என்பது நாணுத்தகவு உடைத்தே."   (புறம்.36)

இன்னும் 'உள்ளியது முடிக்கும் வேந்தனது   சிறப்பும்'  என்றதனால்
அகத்தரசனை அழித்தது கூறலும் கொள்க.

உதாரணம்

"இரும்பிடித் தொழுதியொடு பெருங்கயம் படியா
நெல்லுடைக் கவளமொடு நெய்ம்மிதி பெறாஅ
திருந்தரை நோன்வெளில் வருந்த ஒற்றி
நிலமிசைப் புரளும் கையவெய் துயிர்த்து
அலமரல் யானை உருமென முழங்கவும்
பாலில் குழவி அலறவும் மகளிர்
பூவில் வறுந்தலை முடிப்பவும் நீரில்
வினைபுனை நல்லில் இனைகூஉக் கேட்பவும்
இன்னாது அம்ம ஈங்கினிது இருத்தல்
துன்னருந் துப்பின் வயமான் தோன்றல்
அறவை ஆயின் நினதெனத் திறத்தல்
மறவை ஆயின் போரொடு திறத்தல்
அறவையும் மறவையும் அல்லை யாகத்
திறவா தடைத்த திண்ணிலைக் கதவின்
நீள்மதில் ஒருசிறை ஒடுங்குதல்
நாணுத்தகவு உடைத்திது காணுங் காலே."        (புறம்.44)

தொல் எயிற்று இவர்தலும் - தொல் எயிலின்கண் பரத்தலும்.

உதாரணம்

"புல்லார் புகழொடு போக்கொழியப் பொங்கினனாய்ப்
பல்லார் மருளப் படைபரப்பி - ஒல்லார்
நிறத்திறுத்த வாள்தானை நேரார் மதிலின்
புறத்திறுத்தான் பூங்கழலி னான்."        (புறப்.உழிஞை.10)

தோலது பெருக்கமும் - தோற்படையினது பெருமையும்.

உதாரணம்

"நின்ற புகழொழிய நில்லா உயிரோம்பி
இன்று நாம் வைகல் இழிவாகும் - வென்றொளிரும்
பாண்டில் நிரைதோல் பணியார் பகைஅரணம்
வேண்டில் எளிதென்றான் வேந்து."      (புறப்.உழிஞை.12)

அகத்தோன் செல்வமும் - அகத்தரசனது செல்வமும்.

உதாரணம்

"அளிதோ தானே பாரியது பறம்பே
நளிகொள் முரசின் மூவிரும் முற்றினும்
உழவர் உழாதன நான்குபயன் உடைத்தே
ஒன்றே, சிறியிலை வெதிரின் நெல்விளை யும்மே
இரண்டே, தீஞ்சுளைப் பலவின் பழம் ஊழ்க் கும்மே
மூன்றே, கொழுங்கொடி வள்ளிக் கிழங்குவீழ்க் கும்மே
நான்கே, அணிநிற ஓரி பாய்தலின் மீதழிந்து
திணிநெடுங் குன்றம் தேன்சொரி யும்மே
வான்கண் அற்றவன் மலையே வானத்து
மீன்கண் அற்றதன் சுனையே ஆங்கு
மரந்தொறும் பிணித்த களிற்றினிர் ஆயினும்
புலந்தொறும் பரப்பிய தேரினிர் ஆயினும்
தாளில் கொள்ளலிர் வாளில் தாரலன்
யானறி குவனது கொள்ளும் ஆறே
சுகிர்புரி நரம்பின் சீறியாழ் பண்ணி
விரைஒலி கூந்தல்நும் விறலியர் பின்வர
ஆடினிர் பாடினிர் செலினே
நாடும் குன்றும் ஒருங்கீ யும்மே."              (புறம்.109)

அன்றி   முரணிய  புறத்தோன்  அணங்கிய பக்கமும் - அன்றியும்
பகைத்த புறத்தரசன் வருந்திய பக்கமும்12.

உதாரணம்

"நஞ்சுடை வாலெயிற்று ஐந்தலை சுமந்த
வேக வெந்திறல் நாகம் புக்கென
விசும்பு