இளம்பூரணர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   53
Zoom In NormalZoom Out


 

ழியர் பலவென
உருகெழு பேய்மகள் அயரக்
குருதித்துகள் ஆடிய களங்கிழ வோயே."      (புறம். 371)

ஒன்றிய   மரபின்    தேர்ப்பின் குரவையும் - பொருந்திய மரபின்
தேர்ப்பின் ஆடு குரவையும்.

உதாரணம்

"வஞ்சமில் கோலானை வாழ்த்தி வயவரும்
அஞ்சொல் விறலியரும் ஆடுபவே - வெஞ்சமத்துக்
குன்றேர் மழகளிறுங் கூந்தற் பிடியும்போல்
பின்தேர்க் குரவை பிணைந்து."          (புறப்.வாகை. 8)

பெரும்பகை தாங்கும் வேலும் -  பெரிய   பகையினைத்  தாங்கும்
வேலினைப் புகழுமிடமும்.

உதாரணம்

"இவ்வே, பீலி யணிந்து மாலை சூட்டிக்
கண்திரள் நோன்காழ் திருத்திநெய் அணிந்து
கடியுடை வியனக ரவ்வே அவ்வே
பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து
கொல்துறைக் குற்றில மாதோ என்றும்
உண்டாயிற் பதங்கொடுத்து
இல்லாயின் உடனுண்ணும்
இல்லோர் ஒக்கல் தலைவன்
அண்ணல்எம் கோமான் வைந்நுதி வேலே"      (புறம்.95)

"...................................
நிலைதிரிபு எறியத் திண்மடை கலங்கிச்
சிதைதலுய்ந் தன்றோ நின்வேல் செழிய"       (புறம். 25)

என்பதும் அது.

அரும்பகை    தாங்கும்   ஆற்றலும்  - பொருதற்கரிய பகையைப்
பொறுக்கும் ஆற்றலும்.

உதாரணம்

"களம்புகல் ஓம்புமின் தெவ்விர் போரெதிர்ந்து
எம்முளும் உளனொரு பொருநன் வைகல்
எண்தேர் செய்யுந் தச்சன்
திங்கள் வலித்த காலன் னோனே"            (புறம். 87)

எனவும்,

"என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலர்என்னை
முன்நின்று கல்நின் றவர்."                  (குறள். 77)

புல்லாவாழ்க்கை  வல்லாண்     பக்கமும்     -     பொருந்தாத
வாழ்க்கையினையுடைய வல்லாண் பக்கமும்.

உதாரணம்

"எருதுகால் உறாஅது இளைஞர் கொன்ற
சில்வினை வரகின் புல்லென் குப்பை
தொடுத்த கடவர்க்குக் கொடுத்த மிச்சில்
பசித்த பாணர் உண்டுகடை தப்பலின்
ஒக்கல் ஒற்கஞ் சொலியத் தன்னூர்ச்
சிறுபுல் ஆளர் முகத்தவை கூறி
வரகுகடன் இரக்கும் நெடுந்தகை
அரசுவரில் தாங்கும் வல்லா ளன்னே"        (புறம். 327)

ஒல்லார் நாண பெரியவர்க் கண்ணி சொல்லிய வகையின் ஒன்றொடு
புணர்த்து   தொல்   உயிர்  வழங்கிய அவிப்பலியும் - பொருந்தாதார்
நாணுமாறு   தலைவரைக்     குறித்து   முன்பு   சொன்ன  வஞ்சின
மரபின்  ஒன்றொடு  பொருந்தித்   தொன்றுதொட்டு வருகின்ற உயிரை வழங்கிய அவிப்பலியும்.

உதாரணம்

"சிறந்த திதுவெனச் செஞ்சோறு வாய்ப்ப
மறந்தரு வாளமர் என்னும் - பிறங்கழலுள்
ஆருயிர் என்னும் அவிவேட்டார் ஆங்கஃதால்
வீரியரெய் தற்பால வீடு"              (புறப்.வாகை. 30)

எனவும்,

"இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே
பிழைத்தது ஒறுக்கிற் பவர்."               (குறள். 776)

எனவும் வரும்.

ஒல்லார்      இடவயின்   புல்லிய   பாங்கும்  -  பொருந்தாதார்
இடத்தின்கண் பொருந்திய பக்கமும்.

அஃதாவது,  போரில்வழி  நாடு  கைத்தென்று  கொண்டு உவத்தல்.
(கைத்து கையகப்பட்டது. உவத்தல் - வெகுளிவிட்டிருத்தல்.)

உதாரணம்

"மாண்டனை பலவே போர்மிகு குருசில்நீ
மாதிரம் விளக்குஞ் சால்புஞ் செம்மையும்
முத்துடை மருப்பின் மழகளிறு பிளிற
மிக்கெழு கடுந்தார் துய்த்தலைச் சென்று
துப்புத்துவர் போகப் பெருங்கிளை உவப்ப
ஈத்தான்று ஆனா இடனுடை வளனும்
துளங்குகுடி திருத்திய வலம்படு வென்றியும்
எல்லாம் எண்ணின் இடுகழங்கு தபுந
கொன்னொன்று மருண்டனென் அடுபோர்க் கொற்றவ
நெடுமிடல் சாயக் கொடுமிடல் துமியப்
பெருமலை யானையொடு புலங்கெட இறுத்துத்
தடந்தாள் நாரை படிந்திரை கவரும்
முடந்தை நெல்லில் கழைஅமல் கழனிப்
பிழையா விளையுள் நாடகப் படுத்து
வையா மாலையர் விசையுநர்க் கறுத்த
பகைவர் தேஎத்து ஆயினும்
சினவாய் ஆகுதல் இறும்பூதாற் பெரிதே"    (பதிற்றுப். 32)

என்பதனுள் பகைவர் நாடு கைக்கொண்டிருந்தவாறு அறிக.

பகட்டினானும்    ஆவினானும்   துகள்   தபு சிறப்பின் சான்றோர் பக்கமும் - பகட்டினானும்     ஆவினானும்     குற்றம்       தீர்ந்த சிறப்பினையுடைய சான்றோர் பக்கமும்.

பகட்டால்     புரை தீர்ந்தார் வேளாளர். ஆவால் குற்றம் தீர்ந்தார்
வணிகர்,  இவ்விரு    குலத்தினும்    அமைந்தார்   பக்கமும்.  அவர் குலத்தினுள் அளவால் மிக்க நீர்மையராதலின் வேறு ஓதப்பட்டது.

உதாரணம்

"உண்டால் அம்மஇவ் வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவது ஆயினும் இனிதெனத்
தமியர் உண்டலும் இலரே முனிவிலர்
துஞ்சலும் இலர்பிறர் அஞ்சுவது அஞ்சிப்
புகழெனில் உயிருங் கொடுக்குவர் பழியெனின்
உலகுடன் பெறினுங் கொள்ளலர் அயர்விலர்
அன்ன மாட்சி அனையர் ஆகித்
தமக்கென முயலா நோன்தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மை யானே."       (புறம். 182)

கடிமனை நீத்த பாலும் - கடிமனை நீத்த பக்கமும்.

அஃதா