இளம்பூரணர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   57
Zoom In NormalZoom Out


 

செய்தல் ஆற்றீ ராயினும்
அல்லது செய்தல் ஓம்புமின் அதுதான்
எல்லாரும் உவப்பது அன்றியும்
நல்லாற்றுப் படூஉம் நெறியுமா ரதுவே."         (புறம்.95)

பண்பு உற வரூஉம் பகுதிநோக்கிப் புண்கிழித்து முடியும்  மறனும் -
இயல்புற வரும் பகுதிநோக்கிப் புண்கிழித்து முடியும் மறக்காஞ்சியும்.

உதாரணம்

"நகையமர் ஆயம் நடுங்க நடுங்கான்
தொகையமர் ஓட்டிய துப்பின் - பகைவர்முன்
நுங்கிச் சினவுதல் நோனான் நுதிவேலான்
பொங்கிப் பரிந்திட்டான் புண்."          (புறப்.காஞ்சி.15)

ஏமச்சுற்றம் இன்றிப் புண்ணோன் பேஎய்ஓம்பிய பேஎய்ப்பக்கமும் -
ஓம்பும்       சுற்றம்  இன்மையாற்    புண்ணோனைப்  பேய் ஓம்பிய
பேய்ப்பக்கமும்.

உதாரணம்

"ஆயும் அடுதிறலாற் கன்பிலார் இல்போலும்
தோயுங் கதழ்குருதி தோள்புடைப்பப் - பேயும்
களம்புகலச் சீறிக் கதிர்வேல்வாய் வீழ்ந்தான்
உளம்புகல ஓம்பல் உறும்."             (புறப். காஞ்சி.16)

இன்னன் என்று   இரங்கிய    மன்னையும்   -   இத்தன்மையான்
என உலகத்தார் இரங்கிய மன்னைக் காஞ்சியும்.

உதாரணம்

"சிறியகள் பெறினே எமக்கீயும் மன்னே
பெரியகள் பெறினே
யாம்பாடத் தான்மகிழ்ந் துண்ணும் மன்னே
சிறுசோற் றானும் நனிபல கலத்தன் மன்னே
பெருஞ்சோற்றானும் நனிபல கலத்தன் மன்னே
என்பொடு தடிபடு வழியெல்லாம் எமக்கீயும் மன்னே
அம்பொடு வேல்நுழை வழியெல்லாம் தானிற்கும் மன்னே
நரந்த நாறுந் தன்கையாற்
புலவுநாறும் என்தலை தைவரும் மன்னே
அருந்தலை இரும்பாணர் அகன் மண்டைத் துளையுரீஇ
இரப்போர் கையுளும் போகிப்
புரப்போர் புன்கண் பார்வை சோர
அஞ்சொல் நுண் தேர்ச்சிப் புலவர் நாவில்
சென்றுவீழ்ந் தன்றவன் அருநிறத்து இயங்கிய வேலே
ஆசாகு எந்தை யாண்டுளன் கொல்லோ
இனிப், பாடுநரு மில்லைப் பாடுநர்க்கொன் றீகுநரு மில்லைப்
பனித்துறைப் பகன்றை நறைக்கொள் மாமலர்
சூடாது வைகி யாங்குப் பிறர்க்கொன்று
ஈயாது வீயும் உயிர்தவப் பலவே."            (புறம்.235)

இன்னது பிழைப்பின் இது ஆகியர்  என  துன்  அருஞ்  சிறப்பின்
வஞ்சினமும்   -   இன்னவாறு    செய்தலைப்     பிழைத்தேனாயின்
இன்னேன்   ஆகக்    கடவேன்   எனக்  கூறிய  துன்னற்கு  அரிய
சிறப்பினையுடைய    வஞ்சினக்   காஞ்சியும்  துணிவுபற்றி  ['ஆகியர்'
என  இறந்த  காலத்தாற் கூறினர்.]

உதாரணம்

"நகுதக் கனரே நாடுமீக் கூறுநர்
இளையன் இவனென உளையக் கூறிப்
படுமணி இரட்டும் பாஅடிப் பணைத்தாள்
நெடுநல் யானையுந் தேரும் மாவும்
படையமை மறவரும் உடையம் யாமென்று
உறுதுப் பஞ்சாது உடல்சினஞ் செருக்கிச்
சிறுசொல் சொல்லிய சினங்கெழு வேந்தரை
அருஞ்சமஞ் சிதையத் தாக்கி முரசமொடு
ஒருங்கப் படேஎ னாயின் பொருந்திய
என்நிழல் வாழ்நர் செல்நிழற் காணாது
கொடியன்எம் இறையெனக் கண்ணீர் பரப்பிக்
குடிபழி தூற்றுங் கோலேன் ஆகுக
ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவ னாக
உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின்
புலவர் பாடாது வரைகஎன் நிலவரை
புரப்போர் புன்கண் கூர
இரப்போர்க் கீயா இன்மையான் உறவே."      (புறம் . 72)

இன்னகை மனைவி பேஎய் புண்ணோன் துன்னுகல் கடிந்த தொடாக்
காஞ்சியும் -  இனிய  நகையார்ந்த   மனைவி  பேய்  புண்ணோனைக்
கிட்டுதலைக் காத்த தொடாக்காஞ்சியும்.

உதாரணம்

"தீங்கனி இரவமொடு வேம்புனைச் செரீஇ
வாங்குமருப்பு யாழொடு பல்லியங் கறங்கக்
கைபயப் பெயர்த்து மையிழுது இழுகி
ஐயவி சிதறி ஆம்பல் ஊதி
இசைமணி எறிந்து காஞ்சி பாடி
நெடுநகர் வரைப்பின் கடிநறை புகைஇக்
காக்கம் வம்மோ காதலம் தோழி
வேந்துறு விழுமந் தாங்கிய
பூம்பொறிக் கழற்கால் நெடுந்தகை புண்ணே."    (புறம்.281)

நீத்த    கணவன் தீர்த்த வேலின் பெயர்த்த மனைவி ஆஞ்சியும் -
தன்னை நீத்த கணவன் விடுத்த வேலினானே மனைவி தன் உயிரையும்
பெயர்த்த ஆஞ்சியும்.

உதாரணம்

"கௌவைநீர் வேலிக் கடிதேகாண் கற்புடைமை
வெவ்வேல்வாய் வீழ்ந்தான் விறல்வெய்யோன் - அவ்வேலே
அம்பிற் பிறழுந் தடங்கண் அவன்காதற்
கொம்பிற்கும் ஆயிற்றே கூற்று."         (புறப்.காஞ்சி.23)

நிகர்த்து     மேல்   வந்த    வேந்தனொடு  முதுகுடி  மகட்பாடு
அஞ்சிய   மகட்பாலும்  -  ஒத்து    மாறுபட்டுத்  தன்  மேல்  வந்த
வேந்தனொடு     தன்   தொல்குலத்து    மகட்கொடை    அஞ்சிய மகட்பாற்காஞ்சியும்.

உதாரணம்

"நுதிவேல் கொண்டு நுதல்வியர் துடையாக்
கடிய கூறும் வேந்தே தந்தையும்
நெடிய அல்லது