இளம்பூரணர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   62
Zoom In NormalZoom Out


 

ஆள்வினை மருங்கிற் கேண்மைப் பாலே
ஒல்லாது ஒல்லும் என்றலும் ஒல்லுவது
இல்லென மறுத்தலும் இரண்டும் வல்லே
இரப்போர் வாட்டலும் அன்றியும் புரப்போர்
புகழ்குறை படூஉம் வாயில் அத்தை
அனைத்தா கியர்இனி இதுவே எனைத்தும்
சேய்த்துக் காணாது கண்டனம் அதனான்
நோயில ராகநின் புதல்வர் யானும்
வெயிலென முனியேன் பனியென மடியேன்
கல்குயின் றன்னஎன் நல்கூர் வளிமறை
நாணலது இல்லாக் கற்பின் வாள்நுதல்
மெல்லியற் குறுமகள் உள்ளிச்
செல்வல் அத்தை சிறக்கநின் நாளே."         (புறம்.196)

கொடுப்போர் ஏத்திக் கொடார்ப் பழித்தல் வருமாறு

"களங்கனி அன்ன கருங்கோட்டுச் சீறியாழ்ப்
பாடின் பனுவற் பாணர் உய்த்தெனக்
களிறில வாகிய புல்லரை நெடுவெளிற்
கான மஞ்ஞை கணனொடு சேப்ப
ஈகை அரிய இழையணி மகளிரொடு
சாயின் றென்ப ஆஅய் கோயில்
சுவைக்கினி தாகிய குய்யுடை அடிசில்
பிறர்க்கீ வின்றித் தம்வயி றருத்தி
உரைசால் ஓங்குபுகழ் ஒரீஇய
முரைசுகெழு செல்வர் நகர்போ லாதே."        (புறம்.127)

இதனுள் ஏத்தப்பட்டவன் ஆய். பழிக்கப்பட்டவர் செல்வர்.

அடுத்து  ஊர்ந்து  ஏத்திய  இயல்மொழி  வாழ்த்தும் - வென்றியும்
குணனும் அடுத்துப் பரந்து ஏத்திய இயல்மொழி வாழ்த்தும்.

அஃது,  இயல்மொழி  எனவும்,  வாழ்த்து  எனவும்,   இயல்மொழி
வாழ்த்து எனவும் மூவகைப்படும்.

உதாரணம்

"ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்
நீர்த்துறை படியும் பெருங்களிறு போல
இனியை பெரும எமக்கே மற்றதன்
துன்னருங் கடாஅம் போல
இன்னாய் பெருமநின் ஒன்னா தோர்க்கே"       (புறம்.14)

இஃது இயல்மொழி.

"ஆன்முலை அறுத்த அறனி லோர்க்கும்
மாணிழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும்
குரவர்த் தப்பிய கொடுமை யோர்க்கும்
வழுவாய் மருங்கிற் கழுவாயும் உளவென
நிலம்புடை பெயர்வ தாயினும் ஒருவன்
செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்லென
அறம்பாடிற்றே ஆயிழை கணவ
காலை அந்தியும் மாலை அந்தியும்
புறவுக் கருவன்ன புன்புல வரகின்
பாற்பெய் புன்கம் தேனொடு மயக்கிக்
குறுமுயற் கொழுஞ்சூடு கிழித்த ஒக்கலொடு
இரத்தி நீடிய அகன்தலை மன்றத்துக்
கரப்பில் உள்ளமொடு வேண்டுமொழி பயிற்றி
அமலைக் கொழுஞ்சோறு ஆர்ந்த பாணர்க்கு
அகலாச் செல்வம் முழுவதுஞ் செய்தோன்
எங்கோன் வளவன் வாழ்க என்றுநின்
பீடுகெழு நோன்தாள் பாடேன் ஆயின்
படுபறி யலனே பல்கதிர்ச் செல்வன்
யானோ தஞ்சம் பெருமஇவ் வுலகத்துச்
சான்றோர் செய்த நன்றுண் டாயின்
இமயத்து ஈண்டி இன்குரல் பயிற்றிக்
கொண்டல் மாமழை பொழிந்த
நுண்பல் துளியினும் வாழிய பலவே"           (புறம்.34)

இது வாழ்த்து.

"ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்
தென்புலம் வாழ்நர்க் கருங்கடன் இறுக்கும்
பொன்பொற் புதல்வர்ப் பெறாஅ தீரும்
எம் அம்பு கடிவிடுதும் நும்அரண் சேர்மினென
அறத்தாறு நுவலும் பூட்கை மறத்திற்
தொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும்
எங்கோ வாழிய குடுமி தங்கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த
முந்நீர் விழவின் நெடியோன்
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே."          (புறம்.9)

இஃது இயல்மொழி வாழ்த்து.

"பார்ப்பார்க்கு அல்லது பணிபறி யலையே
பணியா உள்ளமொடு அணிவரக் கெழீஇ
நட்டோர்க் கல்லது கண்ணஞ் சலையே
வணங்குசிலை பொருதநின் மணங்கமழ் அகலம்
மகளிர்க்கு அல்லது மலர்ப்பறி யலையே
நிலந்திறம் பெயருங் காலை ஆயினும்
கிளந்த சொல்நீ பொய்ப்பறி யலையே
சிறியிலை உழிஞைத் தெரியல் சூடிக்
கொண்டி மிகைபடத் தண்டமிழ் செறித்துக்
குன்றுநிலை தளர்க்கும் உருமிற் சீறி
ஒருமுற் றிருவர் ஒட்டிய ஒள்வாள்
செருமிகு தானை வெல்போ ரோயே
ஆடுபெற்று அழிந்த மள்ளர் மாறி
நீகண் டனையேம் என்றனர் நீயும்
நும்நுகம் கொண்டினும் வென்றோய் அதனால்
செல்வக் கோவே சேரலர் மருக
கால்திரை எடுத்த முழங்குகுரல் வேலி
நனந்தலை உலகஞ் செய்தநன் றுண்டெனின்
அடையடுப் பறியா அருவி யாம்பல்
ஆயிர வெள்ள ஊழி
வாழி யாத வாழிய பலவே."               (பதிற்றுப்.63)

என்பதும் அது. பிறவும் அன்ன.

சேய்வரல்  வருத்தம்   வீட   வாயில்காவலர்க்கு  உரைத்த கடை
நிலையும்  -  சேய்மைக்கண்ணின்று  வருகின்ற  வருத்தம் தீர வாயில்
காவலர்க்கு உரைத்த வாயில் நிலையும்.

உதாரணம்

"வாயி லோயே வாயி லோயே
வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தித்தாம்
உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்து
வரிசைக்கு வருந்தும்இப் பரிசில் வாழ்க்கைப்
பரிசிலர்க்கு அடையா வாயி லோயே
கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி
தன்அறி யலன்கொல் என்னறி யலன்கொல்
அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென
வறுந்தலை உலகமும் அன்றே அதனாற்
காவினெம் கலனே சுருக்கினெம் கலப்பை
மரங்கொல் தச்சன் கைவல் சிறாஅர்
மழுவுடைக் காட்டகத் தற்றே
எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே."     (புறம்.206)

கண்படை  கண்ணிய  கண்படைநிலையும் - இறைவன்   கண்படை
நிலையைக் குறித்த கண்படை நிலையும்.

என்றது, அரசன் இனிது துயின்றது கூறல் என்றவாறாம்.

உதாரணம்

"மேலார் இறைஅமருள் மின்னார் சினஞ்சொரியும்
வேலான் விறன்முனை வென்றடக்கிக் - கோலால்
கொடிய உலகில் குறுகாமை எங்கோன்
கடியத் துயிலேற்ற கண்."             (புறப். பாடாண்.8)

கபிலை  கண்ணிய  வேள்விநிலையும்  -  கபிலையைக்    குறித்த
வேள்விநிலையும்.

உதாரணம்

"பருக்காழும் செம்பொன்னும் பார்ப்பார் முகப்பக்
குருக்கண் கபிலை கொடுத்தான் - செருக்கோடு
இடிமுரசத் தானை