இளம்பூரணர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   70
Zoom In NormalZoom Out


 

யொருவர்  புணர்தற் குறிப்பொடு காண்ப என்றவாறு. மிக்கோனாயினும்
என்றஉம்மை இறந்தது தழீஇய எச்சவும்மை. எற்றுக்கு எதிர் மறையாக்கி
`இழிந்தோனாயினும் கடியப்படாது'  என்றாற் குற்ற மென்னை  யெனின்
செந்தமிழ்   நிலத்து   வழக்கொடு சிவணி வருகின்ற பெருமையாதலின்,
இழிந்தானொடு உயர்ந்தாட்குளதாகிய கூட்டமின்மை பெருவழக்காதலின்
அது   பொருளாகக்   கொள்ளப்படும்  என்பது.  ஈண்டுக்  கிழவனும்
கிழத்தியும் என ஒருவனும் ஒருத்தியும் போலக் கூறினாராயினும்.

"ஒருபாற் கிளவி யேனைப்பாற் கண்ணும்
வருவகைதானே வழக்கென மொழிப".    (பொருளியல்.26)

என்பதனாலும், இந்நூல் உலக வழக்கே நோக்குதலானும் அவர் பல
வகைப்படுவர்,   அஃதாமாறு  அந்தணர்  அரசர்  வணிகர் வினைஞர்
என்னும் நால்வரொடும் அநுலோமர் அறுவரையும் ஊட்டப்பதின்மராவர்.
இவரை  நால்வகை  நிலத்தோடு  உறழ  நாற்பதின்மராவர் 2இவரையும்
அவ்வந்நிலத்திற்குரிய   ஆயர்   வேட்டுவர் குறவர் பரதவர்  என்னுந்
தொடக்கத்தாரோடு கூட்டப் பலராவர். அவரையும் உயிர்ப் பன்மையான்
நோக்க வரம்பிலராவர்.                                    (2)

91 சிறந்துழி ஐயஞ் சிறந்த தென்ப
இழிந்துழி இழிவே சுட்ட லான.

என் - எனின் ஐயம் நிகழும் இடம் உணர்த்துதல் நுதலிற்று.

ஒருவன்     ஒருத்தியைக்   கண்ணுற்றுழி   அவ்விரு   வகையும்
உயர்வுடையராயின் அவ்விடத்து,  ஐயம்  சிறந்தது  என்று சொல்லுவர்;
அவர் இழிபுடையராயின்,    அவ்விடத்து    அவன்    இழிபினையே
சுட்டியுணர்தலான்  என்றவாறு.  சிறப்பு என்பது மிகுதி, ஐயமிகுதலாவது
மக்களுள்ளாள் அல்லள் தெய்வமோ என மேலாயினாரோடே ஐயுறுதல்,
சிறந்துழி  என்பதற்குத் தலைமகள் தான் சிறந்துழியும்  கொள்ளப்படும்;
அவளைக் கண்ட இடம் ஐயப்படுதற்குச்  சிறந்துழியும்  கொள்ளப்படும்.
உருவ   மிகுதியுடையளாதலின்  ஆயத்தாரிடைக்  காணினும் தெய்வம்
என்று   ஐயுறுதல்,  இதனாற்   சொல்லியது  உலகத்துத்  தலைமகனும்
தலைமகளுமாக நம்மால் வேண்டப்பட்டார் அந்தணர் முதலாகிய நான்கு
வருணத்தினும்    ஆயர்   வேட்டுவர்   குறவர்   பரதவர்   என்னும்
தொடக்கத்தினும்     அக்குலத்தாராகிய     குறுநில    மன்னர்மாட்டு
உளராவரன்றே;    அவரெல்லாரினும்   செல்வத்தானும்   குலத்தானும்
வடிவானும் உயர்ந்த தலைமகனும் தலைமகளுமாயினோர் மாட்டே ஐயம்
நிகழ்வது.  அல்லாதார்  மாட்டும்  அவ்  விழிமரபினையே சுட்டியுணரா
நிற்குமாதலான் என்றவாறு.

`காராரப் பெய்த' என்னும் முல்லைக் கலியுள் (கலித்.109)

"பண்ணித் தமர்தந் தொருபுறந் தைஇய
கண்ணி எடுக்கல்லாக் கோடேந் தகலல்குல்
புண்ணிலார் புண்ணாக நோக்கு முழுமெய்யுங்
கண்ணளோ ஆய மகள்".

என ஐயமின்றிச் சுட்டியுணர்ந்தவாறு காண்க.

இனி உயர்புள்வழி ஐயம் நிகழுமாறு:

"உயர்மொழிக் கிளவி உறழுங் கிளவி
ஐயக் கிளவி ஆடூஉவிற்கு உரித்தே."    [பொருளியல். 42]

என்றாராகலின்,ஐயப்படுவான் தலைமகன் என்று கொள்க. தலைமகள்
ஐயப்படாதது   என்னையெனின்.  அவள்  ஐயப்படுங்கால் தெய்வமோ
வென்று ஐயுறல் வேண்டும். அவ்வாறு ஐயுற்றால் அச்சம் வரும். அஃது
ஏதுவாகக் காம நிகழ்ச்சி யுண்டாகாது.

92 வண்டே இழையே வள்ளி பூவே
கண்ணே அலமரல் இமைப்பே அச்சமென்று
அன்னவை பிறவும் ஆங்கண் நிகழ
நின்றவை களையுங் கருவி என்ப.

என்  -  எனின்.  ஐயப்பட்டான்   துணிதற்குக்  கருவி  உணர்த்துதல்
நுதலிற்று.

எண்ணப்பட்ட வண்டு முதலாகிய எட்டும் பிறவுமாகிய அவ்விடத்து
நிகழாநின்ற ஐயம் களையும் கருவி என்றவாறு.

ஐயமென்பது   அதிகாரத்தான்   வந்தது, `நிகழாநின்றவை' என்பது
குறுகி நின்றது. வண்டாவது மயிரின் அணிந்த பூவைச்  சூழும்  வண்டு.
அது பயின்றதன் மேலல்லது    செல்லாமையின் அதுவும் மக்களுள்ளா
ளென்றறிதற்குக் கருவியாயிற்று.   இழையென்பது   அணிகலன்.  அது
செய்யப்பட்டதெனத் தோற்றுதலானும்,     தெய்வப்பூண்     செய்யா,
அணியாதலானும் அதுவும் அறிதற்குக்  கருவியாயிற்று. வள்ளி என்பது
முலையினும் தோளினும் எழுதிய கொடி. அதுவும் உலகின் உள்ளதாகித்
தோன்றுதலின் (அதுவும்) கருவியாயிற்று. அலமரல்