இளம்பூரணர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   78
Zoom In NormalZoom Out


 

செய் தயர்ப்பினும்
வந்தவழி எள்ளினும் விட்டுயிர்த் தழுங்கினும்
நொந்துதெளி வொழிப்பினும் அச்சம் நீடினும்
பிரிந்தவழிக் கலங்கினும் பெற்றவழி மலியினும்
வருந்தொழிற் கருமை வாயில் கூறினும்
கூறிய வாயில் கொள்ளாக் காலையும்
மனைப்பட்டுக் கலங்கிச் சிதைந்தவழித் தோழிக்கு
நினைத்தல் சான்ற அருமறை உயிர்த்தலும்
உயிராக் காலத்து உயிர்த்தலும் உயிர்செல
வேற்றுவரைவு வரின் அது மாற்றுதற் கண்ணும்
நெறிப்படு நாட்டத்து நிகழ்ந்தவை மறைப்பினும்
பொறியின் யாத்த புணர்ச்சி நோக்கி
ஒருமைக் கேண்மையின் உறுகுறை தெளிந்தோள்
அருமை சான்ற நாலிரண்டு வகையிற்
பெருமை சான்ற இயல்பின் கண்ணும்
பொய்தலை அடுத்த மடலின் கண்ணுங்
கையறு தோழி கண்ணீர் துடைப்பினும்
வெறியாட் டிடத்து வெருவின் கண்ணும்
குறியின் ஒப்புமை மருடற் கண்ணும்
வரைவுதலை வரினும் களவறி வுறினும்
தமர்தற் காத்த காரண மருங்கினும்
தன்குறி தள்ளிய தெருளாக் காலை
வந்தவன் பெயர்ந்த வறுங்களம் நோக்கித்
தன்பிழைப் பாகத் தழீஇத் தேறலும்
வழுவின்று நிலைஇய இயற்படு பொருளினும்
பொழுதும் ஆறும் புரைவ தன்மையின்
அழிவுதலை வந்த சிந்தைக் கண்ணும்
காமஞ் சிறப்பினும் அவனளி சிறப்பினும்
ஏமஞ் சான்ற வுவகைக் கண்ணும்
தன்வயின் உரிமையும் அவன்வயிற் பரத்தையும்
அன்னவு முளவே ஓரிடத் தான.

என்றது,  தலைவிக்கு  இயற்கைப்புணர்ச்சி  முதலாகக்  களவின்கட்
`குறிப்பினு    மிடத்தினு   மல்லது'   (களவியல்-18)    நிகழ்ச்சி
யெல்லாவற்றினும் கூற்று நிகழுமிடம் உணர்த்துதல் நுதலிற்று.

மறைந்தவற் காண்டல் என்பது  -  தன்னைத் தலைவன் காணாமல்
தான் அவனைக் காணுங் காட்சி.

தற்காட்டுறுதல் என்பது - தன்னை அவன் காணுமாறு நிற்றல்.

நிறைந்த....  மழுங்கல்  என்பது - நிரம்பிய வேட்கையால் தலைவன்
கூறிய சொற் கேட்டு எதிர்மொழி கூறாது மடிந்து நிற்றல்.

இம் மூன்றிடத்தினுங் கூற்று நிகழாது.

வழிபாடு மறுத்தல் என்பது - அதன்பின் இவள் வேட்கைக் குறிப்புக்
கண்டு சாரலுற்றவழி அதற்கு உடம்படாது மறுத்தல்.

அது குறிப்பினானும் கூற்றினானும் வரும்.

மறுத்தெதிர்கோடல் என்பது  -  மறுத்தாங்கு    மறாது   பின்னும்
ஏற்றுக்கோடல்.

பழிதீர்... தோற்றல் - குற்றந்தீர்ந்த முறுவல் சிறிது தோற்றுவித்தல்.

அது  புணர்தற்கு உடன்பாடு காட்டி நிற்கும். இவை ஆறு நிலையும்
புணர்ச்சிக்கு  முன்  நிகழும்.  ஈண்டுங்  குறிப்பு நிகழ்ச்சியல்லது கூற்று
நிகழ்ச்சி அருகியல்லது வாராது. அவற்றுள் சில வருமாறு:

`இகல் வேந்தன் சேனை' என்னும் முல்லைக்கலியுள்.

"மாமருண் டன்ன மழைக்கண்சிற் றாய்த்தியர்
நீமருட்டுஞ் சொற்கண் மருள்வார்க் குரையவை
யாமுனியா ஏறுபோல் வைகற் பதின்மரைக்
காமுற்றுச் செல்வாயோர் கட்குத்திக் கள்வனை
நீஎவன் செய்தி பிறர்க்கு
யாம்எவன் செய்தும் நினக்கு".

இது வழிபாடு மறுத்தது. இன்னும் இதனுள்,

"தேங்கொள் பொருப்பன் சிறுகுடி எம்ஆயர்
வேந்தூட்டு அரவத்து நின்பெண்டிர் காணாமல்
காஞ்சித்தா துக்கன்ன தாதெரு மன்றத்துத்
தூங்குங் குரவையுள் நின்பெண்டிர் கேளாமை
ஆம்பற் குழலாற் பயிர்பயிர் எம்படப்பைக்
காஞ்சிக்கீழ்ச் செய்தேங் குறி."              (கலித். 108)

இது மறுத்தெதிர் கோடல்.

பழிதீர் முறுவல் சிறிதே தோற்றற்கு

உதாரணம்:

"அன்னையோ,
மன்றத்துக் கண்டாங்கு சான்றார் மகளிரை
இன்றி அமையேனென் றின்னவுஞ் சொல்லுவாய்
நின்றாய் நீ சென்றீ எமர்காண்பர் நாளையுங்
கன்றொடு சேறும் புலத்து."                 (கலித் .110)

இதனுள் "அன்னையோ" என்பது நகையொடு கூடிய சொல்.

கைப்பட்டுக் கலங்கினும் என்பது - தலைவன்  கையகப்பட்ட  பின்பு
என்செய்தே மாயினேம் எனக் கலக்கமுறினும் என்றவாறு.

நாணுமிகவரினும்  என்பது - தலைவிக்கு  முன்புள்ள  நாணத்தினும்
மிக நாணம் வந்துழியும் என்றவாறு.

இட்டுப்பிரி  விரங்கினும்  என்பது  -  தலைவன்  இட்டு வைத்துப்
பிரிவன் என அஞ்சியதற்கு இரக்க முறினும் என்றவாறு.

அருமைசெய் தயர்ப்பினும் என்பது தலைவன் வருதற்குக் காவலாகிய
அருமை செய்ததனால் அவனும் வருதலைத் தவிரினும் என்றவாறு.

வருதலைத்   தவிர்தலை  அயர்ப்ப  என்றார்.  அன்றியும்  புறத்து
விளையாடுதற்கு அருமை    செய்ய    மயக்கம்வரினும்    என்றுமாம்.
செய்தென்பதனைச் செயவெனத் திரிக்க.

வந்தவழி எள்ளினும் என்பது - தலைவன்  வந்தவிடத்து  அலராகு
மென்றஞ்சி இகழ்ந்தவழியும் என்றவாறு.

விட்டுயிர்த்தழுங்கினும் என்பது - மறையாது  சொல்லி  இரங்கினும்
என்றவாறு.

நொந்து   தெளிவொழிப்பினும்   என்பது - தலைவன்  தெளிவித்த
தெளிவை நொந்து, அதனை யொழிப்பினும் என்றவாறு.

அச்சம்  நீடினும்  என்பது  -  தலைவன்  வருகின்றது இடையீடாக
அச்சம் மிக்குழியும் என்றவாறு.

பிரிந்தவழிக் கலங்கினும் என்பது -   பிரிந்தவழிக்   கலக்கமுறினும்
என்றவாறு.

அது தாளாணெதிரும் பிரிவு.

பெற்றவழி மலியினும் என்பது - தலைவனோடு கூட்டம்  பெற்றவழி
மகிழினும் என்றவாறு.

வருந்தொழிற்கு  அருமை   வாயில்  கூறினும் என்பது - தலைவன்
வருதற்கு  இடையீடாகக்   காவலர்   கடுகுதலான்   ஈண்டு   வருதல்
அரிதெனத் தோழி தலைவிக்குச் சொல்லினும் என்றவாறு.

கூறிய  ...  காலையும் என்பது-தோழி இவ்வாறு கூறியதனை  மனங்
கொள்ளாத காலத்தினும் என்றவாறு.

மனைப்பட்டு அருமறை யுயிர்த்தலும்  என்பது-புறத்து விளையாடுதல்
ஒழிந்து மனைப்பட்டுக்