தோழிநங் களவே".
(அகம்.122)
என வரும்.
முனிவு மெய்ந்நிறுத்தற்குச் செய்யுள்:-
"நோமே நெஞ்சே நோமே நெஞ்சே
இமைதீய்ப் பன்ன கண்ணீர் தாங்கி
அமைதற் கமைந்தநங் காதலர்
அமைவிலர் ஆகுதல் நோமே நெஞ்சே."
(குறுந்.4)
என வரும்,
அச்சத்தின் அகறற்குச் செய்யுள்:-
"பேணுப பேணார் பெரியோர் என்பது
நாணுத்தக் கன்றது காணுங் காலை
உயிரார் அன்ன செயிர் நீர் நட்பின்
நினக்கியான் மறைத்தல் யாவது மிகப்பெரிது
அழிதக் கன்றால் தானே கொண்கன்
யான்யாய் அஞ்சுவல் எனினுந் தான்எற்
பிரிதல் சூழான் மன்னே இனியே
கானல் ஆயம் அறியினும் ஆனாது
அலர்வது அன்றுகொல் என்னு மதனால்
புலர்வது கொல் அவன் நட்பென
அஞ்சுவல் தோழிஎன் னெஞ்சத் தானே". (நற்றிணை.72)
என வரும்.
அவன் புணர்வு மறுத்தற்குச் செய்யுள்:-
"யாரு மில்லைத் தானே கள்வன்
தானது பொய்ப்பின் யான்எவன் செய்கோ
தினைத்தா ளன்ன சிறுபசுங் கால
ஒழுகுநீர் ஆரல் பார்க்குங்
குருகும் உண்டுதாம் மணந்த ஞான்றே".
(குறுந்.25)
என வரும்.
தூது முனிவின்மைக்குச் செய்யுள்:-
"புல்வீழ் இற்றிக் கல்லிவர் வெவ்வேர்
வரையிழி யருவியின் தோன்று நாடன்
தீதில் நெஞ்சத்துக் கிளவி நம்வயின்
வந்தன்று வாழி தோழி நாமும்
நெய்பெய் தீயின் எதிர்கொண்டு
தாம்வரைந் தனையமென விடுகம் தூதே"
(குறுத்.109)
என வரும்,
துஞ்சிச் சேர்தற்குச் செய்யுள் வந்தவழிக் காண்க.
காதல் கைம்மிகுதற்குச் செய்யுள்:-
"கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
நல்லான் தீம்பால் நிலத்துக் காஅங்கு
எனக்கு மாகா தென்னைக்கும் உதவாது
பசலை உணீஇயர் வேண்டுந்
திதலை அல்குல் என் மாமைக் கவினே"
(குறுந்.27)
என வரும்.
கட்டுரையின்மைக்குக் கூற்று நிகழாது.
பொய்தலையடுத்த மடலின்கண் தலைமகள் கூறிய செய்யுள் வந்த
வழிக் காண்க.
கையறு தோழி கண்ணீர் துடைத்தற்குச் செய்யுள்:
"யாம்எம் காமந் தாங்கவுந் தாம்தம்
கெழுதகை மையின் அழுதன தோழி
கன்றாற்றுப் படுத்த புன்தலைச் சிறாஅர்
மன்ற வேங்கை மலர்பத நோக்கி
ஏறா திட்ட ஏமப் பூசல்
விண்தோய் விடரகத் தியம்பும்
குன்ற நாடற் கண்டஎங் கண்ணே".
(குறுந்.241)
என வரும்.
வெறியாட்டிடத்து வெருவினாற் கூறியதற்குச் செய்யுள்: -
"நம்முறு துயரம் நோக்கி அன்னை
வேலவற் றந்தனள் ஆயினவ் வேலன்
வெறி கமழ் நாடன் கேண்மை
அறியுமோ தில்ல செறியெயிற் றோயே"
(ஐங்குறு,241)
என வரும்.
குறியின் ஒப்புமை மருடற்குக் கூறிய செய்யுள்:-
"அணிகடல் தண்சேர்ப்பன் தேர்ப்பரிமா பூண்ட
மணியரவம் என்றெழுந்து போந்தேன் - கனிவிரும்பும்
புள்ளரவங் கேட்டுப் பெயர்ந்தேன் ஒளியிழாய்
உள்ளுருகு நெஞ்சினேன் யான். (ஐந்திணையைம். 50)
" ... ... ... ... ... ...
கனை பெயல் நடுநாள்யான் கண்மாறக் குறிபெறாஅள்
புனையிழாய் என்பது நினக்குரைக்குந் தானென்ப
துளிநசை வேட்கையான் மிசைபாடும் புள்ளின்றன்
அளிநசைஇ ஆர்வுற்ற அன்பினேன் யானாக" (கலித்.46)
என வரும்.
வரைவுதலை வந்தவழிக் கூறிய செய்யுள் : -
"கொல்லைப் புனத்த அகில் சுமந்து கல்பாய்ந்து
வானின் அருவி ததும்பக் கவினிய
நாடன் நயமுடையன் என்பதனால் நீப்பினும்
வாடல் மறந்தன தோள்."
(ஐந்திணையெழு.2)
நயமுடைய னென்றதனான் வரைவு தலைவந்தமை
யறிந்து
கூறினாளாம்.
"இலைபடர் தண்குளவி பேய்ந்த பொதும்பிற்
குலையுடைக் காந்தள் இனவண் டிமிரும்
வரையக நாடனும் வந்தான்மற் றன்னை
அலையும் அலைபோயிற் றின்று"
(ஐந்திணையெழு.3)
களவறிவுற்றவழிக் கூறிய செய்யுள்:-
"யாங்கா குவமோ அணி நுதற் குறுமகள்
தேம்படு சாரல் சிறு தினைப் பெருங்குரல்
செவ்வாய்ப் பைங்கிளி கவர நீமற்று
எவ்வாய்ச் சென்றனை அவணெனக் கூறி
அன்னை யானாள் கழறமுன் னின்று
அரிவி ஆர்க்கும் பெருவரை நாடனை
அறியலும் அறியேன் காண்டலும் இலனே
வெதிர்புனை தட்டையேன் மலர்பூக் கொய்து
சுனைபாய்ந் தாடிற்றும் இலனென நினைவிலை
பொய்யல் அந்தோ வாய்த்தனை யதுகேட்டுத்
தலையிறைஞ் சினளே யன்னை
செலவொழிந் தனையா லணியைநீ புனத்தே." (நற்றிணை.147)
என வரும்.
தமர் தற்காத்த காரணப் பக்கத்திற்குக் கூறிய செய்யுள்:-
`பெருநீர் அழுவத் தெந்தை தந்த' என்னுங் களிற்றியானை நிரையுள்.
"பல்பூங் கானல் அல்கினம் வருதல்
கவ்வை நல்லணங் குற்ற இவ்வூர்க்
கொடிதறி பெண்டிர் சொற்கொண் டன்னை
கடி கொண் டனளே தோழி பெருந்துறை
எல்லையும் இரவும் என்னோது கல்லென
வலவன் ஆய்ந்த வண்பரி
நிலவுமணல் கொட்குமோர் தேருண் டெனவே". (அகம்.20)
என வரும்.
தன்குறி தள்ளிய தெருளாக் காலை வந்தவன்
பெயர்ந்த வறுங்களம் நோக்கித் தன் பிழைப்பாகத் தழீஇத் தேறியதற்குச் செய்யுள்:-
`இருள் கிழிப்பது போல்' என்னும் களிற்றியானை நிரையுள்,
"வாள்நடந் தன்ன வழக்கருங் கவலை
உள்ளுநர் உட்குங் கல்லடர்ச் சிறுநெறி
அருள்புரி நெஞ்சமோ டெஃகு துணையாக
வந்தோன் கொடியனும் அல்லன் தந்த
நீதவ றுடையையும் அல்லை நின்வயின்
ஆனா அரும்படர் செய்த
யானே தோழி தவறுடை யேனே"
(அகம்.72)
என வரும்.
வழுவின்று... அன்னவுமுளவே என்பது - வழுவின்று நிலைஇய
இயற்படு பொருண் முதலாக
`ஏமஞ்சான்ற உவகை' யீறாகச்
சொல்லப்பட்ட இடங்களில் தன்னிடத்து உரிமையும் அவனிடத்துப்
பரத்தைமையும் அன்னவையும் நிகழப்பெறும் என்றவாறு.
அன்ன என்பது, அவைபோல்வன
|