என்றவாறு.
ஓரிடத்துக்கண் என்றதனால் இவ்வாறு
எல்லார் மாட்டும்
எவ்விடத்தும் நிகழாது என்றவாறாம். எனவே மேற் குறிப்பினும்
இடத்தினுமல்லது (களவியல்-18) கூற்று நிகழாதென்பதனை
மறுத்து
ஓரிடத்துக் கூற்று நிகழும் என்றவாறாம்.
அவற்றுள் வழுவின்று நிலையே இயற்படு பொருளினும் என்பது தலைவனை
இயற்பழித்தவழி அவன் குற்றமிலனாக நிலை நிறுத்தப்பட்ட இயற்படமொழிந்த
பொருண்மைக் கண்ணும் தன்வயின்
உரிமை
தோன்றவும் அவன்வயிற் பரத்தைமையும் தோன்றவும் கூறும் தலைவி
என்றவாறு.
இரண்டினுள் ஒன்றுதோன்ற உரைக்கு மென்றவாறு. எனவே இரண்டுந்தோற்ற வருவனவு முளவாம்.
பொழுது மாறும் ... சிந்தைக் கண்ணும் என்பது - தலைவன் வருங்காலமும்
இடனும் குற்றமுளவாதலான், ஆண்டு அழிவு வந்த சிந்தைக்கண்ணும்
தலைமகள் தன்வயின் உரிமையும் அவன் வயிற் பரத்தைமையும் தோன்றக் கூறும் என்றவாறு.
காமஞ் சிறப்பினும் என்பது - தலைமகன்மாட்டு வேட்கை மிகினும் தன்வயின்
உரிமையும் அவன்வயிற் பரத்தைமையும் உரைக்குந் தலைவி என்றவாறு.
அவன் அளி சிறப்பினும் என்பது - தலைவன் தலைவளி மிக்க
வழியும் தன்வயின் உரிமையும். அவன்வையிற்
பரத்தைமையும் தோன்றக்
கூறும் என்றவாறு.
ஏமஞ்சான்ற உவகைக்கண்ணும் என்பது-ஏமம் பொருந்திய மகிழ்ச்சி வந்துழித்
தன்வயின் உரிமையும் அவன்வயிற் பரத்தைமையும் தோன்றக் கூறும்
என்றவாறு. அஃதாவது இவன் வரைந்தல்லது நீங்கான் என்னும் உவகை.
அவற்றுள் வழுவின்று நிலைஇய இயற்படு பொருட்கண்
கூறியதற்குச் செய்யுள்:-
"அடும்பம லங்கொடி உள்பதைந் தொழிப்ப
வெண்மலர் விரிக்குந் தண்ணந் துறைவன்
கொடியன் ஆயினும் ஆக
அவனே தோழிஎன் னுயிர்கா வலனே" (ஐங்குறு.தனி.6)
என வரும்.
பொழுது மாறும் புரைவதன்மையின் அழிவுதலை வந்த சிந்தையால் தலைவி கூறிய செய்யுள்:-
"கொடுவரி வேங்கை பிழைத்துக் கோட்பட்டு
மடிசெவி வேழ இரிய - அடியோசை
அஞ்சி யொதுங்கும் அதருள்ளி ஆரிருள்
துஞ்சா சுடர்த்தொடி கண்"
(ஐந்திணையைம்.16)
"வளைவாய்ச் சிறுகிளி விழைதினை கடியச்
செல்கென் றாளே அன்னை என நீ
சொல்லின் எவனாந் தோழி கொல்லை
நெடுங்கை வன்மான் கடும்பகல் உழந்த
குறுங்கை இரும்புலிக் கோள்வல் ஏற்றை
பைங்கட் செந்நாய் படுபதம் பார்க்கும்
ஆரிருள் நடுநாள் வருதி
சாரல் நாட வாரலோ எனவே"
(குறுந்.141)
என வரும்.
காம மிக்கவழிக் கூறிய செய்யுள்:-
"அம்ம வாழி தோழி நலனே
இன்ன தாகுதல் கொடிதே பன்னை
அணிமலர் துறைதொறு விரிக்கும்
மணிநீர்ச் சேர்ப்பனை மறவா தோர்க்கே."
(ஐங்குறு.117)
இது தன்வயின் உரிமை:
"நள்ளென் றன்றே யாமஞ் சொல்லவிந்து
இனிதடங் கினரே மாக்கள் முனிவின்றி
நனந்தலை உலகமுந் துஞ்சும்
ஓர்யான் மன்ற துஞ்சா தேனே."
(குறுந்.6)
இஃது அவன்வயிற் பரத்தைமை:
"கொடுந்தாள் அவலம் குறையாம் இரப்பேம்
ஒடுங்கா ஒலிகடற் சேர்ப்பன் - நெடுந்தேர்
கடந்த வழியைஎங் கண்ணாரக் காண
நடந்து சிதையாதி நீ".
(ஐந்திணையைம்.42)
அவனளி சிறந்தவழித் தலைவி கூறிய செய்யுள்:-
"சேணோன் மாட்டிய நறும்புகை ஞெகிழி
வான மீனின் வயின்வயின் இமைக்கும்
ஓங்குமலை நாடன் சாந்துபுலர் அகலம்
உள்ளின் உள்நோய் மல்கும்
புல்லின் மாய்வ தெவன்கொல் அன்னாய்".
(குறுந்.150)
"மன்றப் பலவின் சுளைவிளை தீம்பழம்
உண்டுவந்து மந்தி முலை வருடக் கன்றமர்ந்(து)
ஆமா சுரக்கும் அணிமலை நாடனை
யாமாப் பிரிவ திலம்".
(ஐந்திணையெழு.4)
என வரும்.
ஏமஞ் சான்ற உவகைக்கண் கூறிய செய்யுள்:-
"ஓங்கல் இருவரைமேற் காந்தள் கடிகவினப்
பாம்பென ஓடி உருமிடிப்பக் கண்டிரங்கும்
பூங்குன்ற நாடன் புணர்ந்தவந் நாள்போலா
ஈங்கு நெகிழ்ந்த வளை."
(திணைமொழி.3)
என வரும்.
பரத்தைமை தோன்ற வந்ததற்குச் செய்யுள்:-
" ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
கணங்கொள் இடுமணற் காவி வருந்தப்
பிணங்கிருமோட்ட திரைவந் தளிக்கும்
மணங்கமழ் ஐம்பாலார் ஊடலை ஆங்கே
வணங்கி உணர்ப்பான் துறை."
(கலித்.131)
என்னும் பாட்டினுள் தான் ஊடினாளாகவும்
மகிழ்ந்தவாறும் அவன் வயிற் பரத்தைமை கூறியவாறும் காண்க.
இச்சூத்திரத்தாற் சொல்லியது `மறைந்தவற்
காண்டல்' முதலாக
ஓதப்பட்ட அறுவகைப் பொருண்மையும், `கைப்பட்டுக் கலங்கல்'
முதலாகக் 'கூறியவாயில் கொள்ளாக்
காலை` ஈறாக வரும்
மகிழ்ச்சியினால் மனைப்பட்டுக் கலங்கிச்
சிதைந்தவழி எண்ணுதல்
சான்ற அருமறையைச் சொல்லுதலும்,
இவ்வாறும் எண்ணந்தான்
உரையாக் காலத்துத் தன்னுயிர்
செல்லுமாறு உரைத்தலும்,
`வேற்றுவரைவு வரின் அது மாற்றுதல்' முதலாகத்
'தமர் தற்காத்த
காரணப்பக்கம் `ஈறாகத் தன் குறி பிழைக்க நிற்கப் பெறும்
எனவும்
அவ்வழித் தலைவன் வந்து பெயர்ந்துழிக் கலக்கமின்றித்
தெளிதலும்,
`வழுவின்று நிலைஇய இயற்படு பொருள்' முதலாக `ஏமம்
சான்ற
உவகை' ஈறாகத் `தான் உரியளாகிய நெறியும்
தலைவன் அயலாகிய
நிலையும்போல வரிற் சொல்லப்பெறும் எனவும் குறிப்பினும் இடத்தினும் அல்லது வேட்கை
நெறிப்பட்டவாறாகத் தலைவிக்குக் கூற்று
நிகழு
மிடமும் உணர்த்தியவாறு.
(21)
110. வரைவிடை வைத்த காலத்து வருந்தினும்
வரையா நாளிடை வந்தோன் முட்டினும்
உரையெனத் தோழிக்கு உரைத்தற் கண்ணும்
தானே கூறுங் காலமும் உளவே.
இதுவும் தலைவிமாட்டுச் சொல் நிகழுமிடம் உணர்த்துதல் நுதலிற்று.
தலைவன் இயற்கைப்புணர்ச்சி புணர்ந்து நீங்குகின்றான். இன்ன நாள் வரைந்து
கொள்வல் எனக் கூறித் தோழியிற்
கூட்டத்திற்கு முயலாது தணந்தவழி யதனைத் தோழி
ஐயப்படுங் குறிப்புத் தோன்றாமை மறைத்தொழுகிய
தலைவி அவன் வருந்துணையும்
ஆற்றாது
வருத்தமுறினும் வரையாத
|