இளம்பூரணர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   91
Zoom In NormalZoom Out


 

இது தலைமகள் தன்னை அழிந்ததற்கண் வந்தது.

"கரைபொரு கான்யாற்றங் கல்லத ரெம்முள்ளி வருதிராயின்அரையிருள் யாமத் தடுபுலியோ நும்மஞ்சி யகன்று போக
நரையுருமே றுங்கைவேல் அஞ்சுக நும்மை
வரையர மங்கையர் வவ்வுத லஞ்சுதும் வார லையோ."

இஃது அவனூறு அஞ்சுதற்கண் வந்தது.

நாடுமுதலாயின சுட்டித் தலைவன்மாட்டுத் தோன்றுங் கிளவியாவன-
நீ     இத்தன்மையாகிய     நாட்டையுடையை;     இத்தன்மையாகிய
நகரையுடையை; இத்தன்மைத்தாகிய இல்லையுடையை;இத்தன்மைத்தாகிய
குடிப்பிறப்பை  யுடையை;   இத்தன்மைத்தாகிய   சிறப்புடையை;  என
அவற்றின் மிகுதிபடக் கூறுதல், அவை வருமாறு:-

"கோழிலை வாழை" என்னும் நெடுந்தொகைப் பாட்டினுள்,

"குறியா வின்பம் எளிதின் நின்மலைப்
பல்வேறு விலங்கும் எய்து நாட
குறித்த இன்பம் நினக்கெவன் அரிய".

என நாடு சுட்டி வந்தது.

"காமங் கடப்ப உள்ளம் இனைப்ப
யாம் வந்து காண்பதோ பருவ மாயின்
ஓங்கித் தோன்றும் உயர்வரைக்கு
யாங்கெனப் படுவது நும்மூர் தொய்யோ".     (ஐங்குறு.237)

இஃது ஊர்பற்றி வந்தது.

`துணைபுணர்ந் தெழுதரும்' என்னும் கலித்தொகைப் பாட்டினுள்,

"கடிமலர்ப் புன்னைக்கீழ்க் காரிகை தோற்றாளைத்
தொடிநெகிழ்ந்த தோளளாத் துறப்பாயால் மற்றுநின்
குடிமைக்கட் பெரியதோர்குற்றமாய்க் கிடவாதோ."

இது, குடிமைபற்றி வந்தது.

"ஆய்மலர்ப் புன்னைக்கீழ் அணிநலந் தோற்றாளை
நோய்மலி நிலையளாத் துறப்பாயால் மற்றுநின்
வாய்மைக்கண் பெரியதோர் வஞ்சமாய்க் கிடவாதோ."

"திகழ்மலர்ப் புன்னைக்கீழ்த் திருநலந் தோற்றாளை
துகழ் மலர்க் கண்ணளாத் துறப்பாயால் மற்றுநின்
புகழ்மைக்கட் பெரியதோர் புகராகிக் கிடவாதோ."
                                      (கலித். 135)

"... ... ... ... ... ... ... ... ... ... ...
தாமரைக் கண்ணியைத் தண்ணறுஞ் சாந்தினை
நேரிதழ்க் கோதையாள் செய்குறி நீவரின்
மணங்கமழ் நாற்றத்த மலைநின்று பலிபெறூஉம்
அணங்கென அஞ்சுவர் சிறுகுடி யோரே"        (கலித்.52)

பிறவு மன்ன.

ஐயச் செய்கை தாய்க் கெதிர்மறுத்துப் பொய்யென மாற்றி மெய்வழிக்
கொடுப்பினும்  என்பது  தலைவிக்குப்   பிறரோடு   கூட்டமுண்டெனச்
சொல்லி ஐயுற்றவழி  அதனை  மறுத்துத்  தலைவி செய்த செய்கையைப்
பொய்யென  நீக்கிப்  பிறிதோர்  ஆற்றான்  மெய்வளிக் கட்படுத்தினும்
என்றவாறு.

அஃதாமாறு தலைவி குறிவழிச் செல்கின்றதனைக் காண்டல்.

"உரும்உரறு கருவிய பெருமழை தலைஇப்
பெயலான் றவிந்த தூங்கிருள் நடுநாள்
மின்னுநிமிர்ந் தன்ன கனங்குழை இமைப்பப்
பின்னுவிடு நெறியிற் கிளை இய கூந்தலள்
வரையிழி மயிலின் ஒல்குவனள் ஒதுங்கி
மிடையூர் பிழியக் கண்டனென் இவளென
அலையல் வாழிவேண் டன்னை நம் படப்பைச்
சூருடைச் சிலம்பிற் சுடர்ப்பூ வேய்ந்து
தாம்வேண் டுருவின் அணங்குமார் வருமே
நனவின் வாயே போலத் துஞ்சுநர்க்
கனவாண்டு மருட்டலும் உண்டே இவள்தான்
சுடரின்று தமியளும் பனிக்கும் வெருவர
மன்ற மராத்த கூகை குழறினும்
நெஞ்சழிந் தரணஞ் சேரு மதன்றலைப்
புலிக்கணத் தன்ன நாய்தொடர் விட்டு
முருகன் அன்ன சீற்றத்துக் கடுந்திறல்
எந்தையும் இல்ல னாக
அஞ்சுவள் அல்லளோ இவளது செயலே".      [அகம்.158]

என வரும்,

"வேங்கை நறுமலர் வெற்பிடை யாம்கொய்து
மாந்தளிர் மேனி வியர்ப்பமற் - றாங்கெனைத்தும்
பாய்ந்தருவி ஆடினேம் ஆகப் பணிமொழிக்குச்
சேர்ந்தனவாஞ் சேயரிக்கண் தாம்".    [ஐந்திணையைம்.15]

என்பதும் அது.

அவள்  விலங்குறினும் ..... தாயிடைப்புகுப்பினும் என்பது - தலைவி
காப்பு  மிகுதியானுங்  காதன் மிகுதியானும் நொது மலர் வரைவினானும்
தமர்  வரைவு  மறுத்தினானும்  வேறுபட்ட   வழி  இஃது  ஏற்றினான்|
ஆயிற்று எனச் செவிலி அறிவரை வினாஅய்க்குறிபார்க்கும் இடத்தினும்,
அஃதன்றி வெறியாட்டிடத்தினும், பிறர் வரைவு வந்துழியும் அவர்வரைவு
மறுத்தவழியும்,  முன்னினை     வகையானாதல்     அறத்தொடுநிலை
வகையானாதல் இவ்விருவகையானுந்தலைவற்கும் தலைவிக்கும் தனக்குங்
குலத்திற்கும் குற்றந் தீர்ந்த கிளவியைத்  தாய்மாட்டுப் புகுத விடுத்தலும்
என்றவாறு.

புகுதவிடுத்தலாவது  நிரம்பச்  சொல்லாது  தோற்றுவாய்  செய்தல்.
அந்நால்வகைப் பொருளினும் நின்னிலைக் கிளவி வருமாறு:-

"பொய்படு பறியாக் கழங்கே மெய்யே
மணிவரைக் கட்சி மடமயில் ஆலும்
மலர்ந்த வள்ளியங் கானங் கிழவோன்
ஆண்டகை விறல்வேள் அல்லன் இவள்
பூண்தாங் கிளமுலை அணங்கி யோனே."     (ஐங்குறு.250)

இது குறிபார்த்தவழிக் கூறியது, கழங்கு முன்னிலையாக.

"அம்ம வாழி தோழி பன்மலர்
நறுந்தண் சோலை நாடுகெழு நெடுந்தகை
குன்றம் பாடா னாயின்
என்பயஞ் செயுமோ வேலற்கு வெறியே."     (ஐங்குறு.244)

இது, தலைவியை முன்னிலையாகக் கூறியது.

"நெய்தல் நறுமலர்ச் செருந்தியொடு விரைஇக்
கைபுனை நறுந்தார் கமழு மார்பன்
அருந்திறற் கடவு ளல்லன்
பருந்துறைக் கொண்டிவள் அணங்கி யோனே." (ஐங்குறு.182)

இது வேலனை முன்னிலையாகக் கூறியது.

"கடவுட் கற்சுனை அடைவிறந் தவிழ்ந்த
பறியாக் குவளை மலரொடு காந்தள்
குருதி