டுப்போர் இன்றியுங் கரண முண்டே
புணர்ந்துடன் போகிய காலை யான.
இது மேலதற்கொரு புறனடை.
கொடுப்போரின்றியும், கரண நிகழ்ச்சி உண்டு;
புணர்ந்துடன் போகிய காலத்து என்றவாறு.
எனவே கற்பிற்குக் கரணநிகழ்ச்சி ஒருதலையாயிற்று.
இதனானே
கொடுப்போ ரில்வழியும் கரணநிகழ்ச்சி
உண்மையும் ஒழுக்கக் குறைபாடு இன்மையும் கொள்க.
"பறைபடப் பணிலம் ஆர்ப்ப இறைகொள்பு
தொல்மூ தாலத்துப் பொதியில் தோன்றிய
நாலூர்க் கோசர் நன்மொழி போல
வாயா கின்றே தோழி யாய்கழற்
சேயிலை வெள்வேல் விடலையொடு
தொகுவளை முன்கை மடந்தைநட்பே."
(குறுந்.15)
இதனுள் விடலையொடு மடந்தைநட்பு பறைபடப் பணிலம் ஆர்ப்ப
இறைகொண்டு நாலூர்க் கோசர் நன்மொழிபோல
வாயாயிற்று எனச்
செவிலி நற்றாய்க்குக்
கூறினமையானும் விடலை எனப்
பாலை
நிலத்திற்குரிய தலைவன் பெயர்
கூறினமையானும் கொடுப்போரின்றியும்
கரணம் நிகழ்ந்தவாறு காண்க.
(2)
142. மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணங்
கீழோர்க் காகிய காலமும் உண்டே.
இதுவுமது.
மேற் குலத்தாராகிய அந்தணர் அரசர் வணிகர் என்னும் மூன்று
வருணத்தார்க்கும் புணர்த்த
கரணம் கீழோராகிய வேளாண்
மாந்தர்க்கும் ஆகிய காலமும் உண்டு என்றவாறு.
இதனாற் சொல்லியது, முற்காலத்துக் கரணம் பொதுப்பட நிகழ்தலின்
எல்லார்க்கும் ஆம் என்பதும் பிற்காலத்து வேளாண்
மாந்தர்க்குத
தவிர்ந்ததெனவுங் கூறியவாறு போலும்.
அஃதாமாறு தருமசாத்திரம்
வல்லாரைக் கொண்டுணர்க.
(3)
143. பொய்யும் வழுவுந் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப.
என்றது, கரணமாகியவாறு உணர்த்துதல் நுதலிற்று.
பொய்கூறலும் வழூஉப்பட
வொழுகலும் தோன்றிய பின்னர்
முனைவர் கரணத்தைக் கட்டினார் என்று சொல்வர் என்றவாறு.
இரண்டுந் தோன்றுவது இரண்டாம்
ஊழியின்கண்ணாதலின்
முதலூழியிற் கரணமின்றியே! இல்வாழ்க்கை
நடந்ததென்பதூஉம் இவை
தோன்றிய பின்னர்க் கரணந் தோன்றின தென்பதூஉம் கூறியவாறாயிற்று.
பொய்யாவது செய்ததனைமறைத்தல். வழுவாவது
செய்ததன்கண் முடிய
நில்லாது தப்பி யொழுகுதல். கரணத்தொடு முடிந்த காலையின் அவை
யிரண்டும் நிகழாவா மாதலாற் கரணம் வேண்டுவதாயிற்று.
(4)
144. கரணத்தின் அமைந்து முடிந்த காலை
நெஞ்சுதளை அவிழ்ந்த புணர்ச்சிக் கண்ணும்
எஞ்சா மகிழ்ச்சி இறந்துவரு பருவத்தும்
அஞ்ச வந்த உரிமைக் கண்ணும்
நன்னெறிப் படருந் தொன்னலப் பொருளினும்
பெற்ற தேஎத்துப் பெருமையின் நிலைஇக்
குற்றஞ் சான்ற பொருளெடுத் துரைப்பினும்
நாமக் காலத் துண்டெனத் தோழி
ஏமுறு கடவுள் ஏத்திய மருங்கினும்
அல்லல் தீர ஆர்வமொ டளைஇச்
சொல்லுறு பொருளின் கண்ணுஞ் சொல்லென
ஏனது சுவைப்பினும் நீகை தொட்டது
வானோர் அமிழ்தம் புரையுமால் எமக்கென
அடிசிலும் பூவுந் தொடுத்தற் கண்ணும்
அந்தணர் திறத்தும் சான்றோர் தேஎத்தும்
அந்தமில் சிறப்பிற் பிறர்பிறர் திறத்தினும்
ஒழுக்கங் காட்டிய குறிப்பினும் ஒழுக்கத்துக்
களவினுள் நிகழ்ந்த அருமையைப் புலம்பி
அலமர லுள்ளமொ டளவிய இடத்தும்
அந்தரத் தெழுதிய எழுத்தின் மான
வந்த குற்றம் வழிகெட ஒழுகலும்
அழியல்அஞ்சலென் றாயிறு பொருளினுந்
தானவட் பிழைத்த பருவத் தானும்
நோன்மையும் பெருமையும் மெய்கொள வருளிப்
பன்னல் சான்ற வாயிலொடு பொருந்தித்
தன்னி னாகிய தகுதிக் கண்ணும்
புதல்வற் பயந்த புனிறுதீர் பொழுதின்
நெய்யணி மயக்கம் புரிந்தோள் நோக்கி
ஐயர் பாங்கினும் அமரர்ச் சுட்டியுஞ்
செய்பெருஞ் சிறப்பொடு சேர்தற் கண்ணும்
பயங்கெழு துணையணைப் புல்லிப் புல்லாது
உயங்குவனள் கிடந்த கிழத்தியைக் குறுகி
அல்கல் முன்னிய நிறையழி பொழுதின்
மெல்லன் சீறடி புல்லிய இரவினும்
உறலருங் குரைமையின் ஊடன்மிகுத் தோளைப்
பிறபிற பெண்டிரிற் பெயர்த்தற் கண்ணும்
பிரிவின் எச்சத்துப் புலம்பிய இருவரைப்
பரிவு நீக்கிய பகுதிக் கண்ணும்
நின்றுநனி பிரிவின் அஞ்சிய பையுளுஞ்
சென்றுகை இகந்து
|