பெயர்த் துள்ளிய வழியுங்
காமத்தின் வலியுங் கைவிடின் அச்சமுந்
தானவட் பிழைத்த நிலையின் கண்ணும்
உடன்சேறற் செய்கையொ டன்னவை பிறவும்
மடம்பட வந்த தோழிக் கண்ணும்
வேற்றுநாட் டகல்வயின் விழுமத் தானும்
மீட்டுவர வாய்ந்த வகையின் கண்ணும்
அவ்வழிப் பெருகிய சிறப்பின் கண்ணும்
பேரிசை யூர்திப் பாகர் பாங்கினுங்
காமக் கிழத்தி மனையோள் என்றிவர்
ஏமுறு கிளவி சொல்லிய எதிருஞ்
சென்ற தேஎத் துழப்புநனி விளக்கி
இன்றிச் சென்ற தன்னிலை கிளப்பினும்
அருந்தொழில் முடித்த செம்மற் காலை
விருந்தொடு நல்லவை வேண்டற் கண்ணும்
மாலை யேந்திய பெண்டிரும் மக்களுங்
கேளிர் ஒழுக்கத்துப் புகற்சிக் கண்ணும்
ஏனைய வாயிலோ ரெதிரொடு தொகைஇப்
பண்ணமை பகுதிமுப் பதினொரு மூன்றும்
எண்ணருஞ் சிறப்பிற் கிழவோன் மேன.
இது, தலைவற்கு உரிய கிளவியெல்லாந் தொகுத்துணர்த்துதல் நுதலிற்று.
(இ-ள்) கரணத்தினமைந்து
முடிந்த பின்பு, நெஞ்சுதளை யவிழ்ந்த
புணர்ச்சி முதலாக ஏனைய வாயிலோ ரெதிரொடு
கூடிப் பண்ணுத
லமைந்த பகுதியினையுடைய முப்பத்தின் மூன்றிடத்தினும்
கூறல்
எண்ணுதற்கரிய சிறப்பினையுடைய கிழவோன் மேலன என்றவாறு.
இடம் என்பது வகையிற் கூறியவதனால்
உரைக்கப்பட்டது.
கூற்றென்பது வருகின்ற சூத்திரத்தினும் கொணர்ந்துரைக்கப்பட்டது.
கரணத்தி னமைந்து முடிந்த காலை என்பது - ஆசான்
புணர்ந்த
கரணத்தினால் வதுவை முடிந்தபின் என்றவாறு.
நெஞ்சு தளையவிழ்த லாவது - தலைவியைத் தலைவன்
கண்ணுற்றஞான்று தலைவன்மாட்டு உளதாகிய
பெருமையும் உரனும்
தலைவிமாட்டு உளதாகிய அச்சமும் நாணும் மடனும் ஏதுவாக
இயற்கைப்புணர்ச்சி இடையீடுபட்டுழி
வேட்கை தணியாது வரைந்
தெய்துங்காறும் இருவர்மாட்டும் கட்டுண்டு
நின்ற நெஞ்சம் கட்டு
விடப்படுதல். இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைவன் அலரறி
வுறுக்கப்பட்டு நீங்கி வரைந்
தெய்துங்காலும் புணர்ச்சி வேட்கையாற்
செல்கின்ற நெஞ்சினை இருவரும் வேட்கை தோற்றாமல்
தளைக்கப்பட்டதனைத் தளை
என்றலும் ஒன்று. இவையிரண்டினும்
மிகுதி பொருளாகக் கொள்க.
உதாரணம்
"உழுந்து தலைப்பெய்த கொழுங்களி மிதவை
பெருஞ்சோற் றமலை நிற்ப நிரைகால்
தண்பெரும் பந்தர்த் தருமணல் ஞெமிரி
மனைவிளக் குறுத்து மாலை தொடரிக்
கனையிருள் அகன்ற கவின்பெறு காலைக்
கொள்கால் நீங்கிய கொடுவெண் திங்கள்
கேடில் விழுப்புகழ் நாள்தலை வந்தென
உச்சிக் குடத்தர் புத்தகல் மண்டையர்
பொதுசெய் கம்பலை முதுசெம் பெண்டிர்
முன்னவும் பின்னவும் முறைமுறை தரத்தரப்
புதல்வர்ப் பயந்த திதலையவ் வயிற்று
வாலிழை மகளிர் நால்வர் கூடிக்
கற்பினின் வழாஅ நற்பல உதவிப்
பெற்றோற் பெட்கும் பிணையை ஆகென
நீரொடு சொரிந்த ஈரிதழ் அலரி
பல்லிருங்கதுப்பின் நெல்லொடு தயங்க
வதுவை நன்மணங் கழிந்த பின்றைக்
கல்லென் சும்மையர் ஞெரே ரெனப் புகுதந்து
பேரிற் கிழத்தி யாகெனத் தமர்தர
ஓரிற் கூடிய வுடன் புணர் கங்குற்
கொடும்புறம் வளைஇக் கோடிக் கலிங்கத்து
ஒடுங்கினள் கிடந்தனள் ஓர்புறந் தழீஇ
முயங்கல் விருப்பொடு முகம்புதை திறப்ப
அஞ்சினள் உயிர்த்த காலை யாழநின்
நெஞ்சம் படர்ந்தது எஞ்சா துரையென
இன்னகை இருக்கைப் பின்யான் வினவலின்
செஞ்சூட் டொண்குழை வண்காது துயல்வர
அகமலி உவகையள் ஆகிமுகன் இகுத்து
ஒய்யென இறைஞ்சி யோளே மாவின்
மடங்கொள் மதைஇய நோக்கின்
ஒடுங்கீ ரோதி மாஅ யோளே."
(அகம்.89)
இதனுள் `முயங்கல் விருப்பொடு முகம்புதை திறப்ப அஞ்சினள்
உயிர்த்தகாலை' என்பதனால் இயற்கைப் புணர்ச்சி யின்மையும், `அகமலி யுவகையாகி முகனிகுத்து ஒய்யென
விறைஞ்சி' என்பதனால் உள்ளப் புணர்ச்சி யுண்மையும் அறிக. பிறவும் அன்ன.
எஞ்சா மகிழ்ச்சி யிறந்துவரு பருவத்தும்
என்பது-ஒழியாத மகிழ்ச்சி
மிக்கு வருங்காலத்துத் தலைவன்கட் கூற்று நிகழும் என்றவாறு.
உதாரணம்
"குனிகாயெருக்கின் குவிமுகிழ் விண்டலோடு
பனிவார் ஆவிரைப் பன்மலர் சேர்த்தித்
தாருங் கண்ணியுந் ததைஇத் தன்னிட்டு
ஊரும் மடவோன் உலர்வன் கொல்லென
நீர்த்துறைப் பெண்டிர் நெஞ்சழிந் திரங்கினும்
உணரா
|