இளம்பூரணர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   101
Zoom In NormalZoom Out


 

ளூர்தோறு
அணிமடற் கலிமா மன்றத் தேறித்தன்
அணிநலம் பாடினும் அறியா ளென்றியான்
பெருமலை நெடுங்கோ டேறிப் பெறுகென்று
உருமிடித் தீயின் உடம்புசுடர் வைத்த
என்னுறு விழுமம் நோக்கிப் பொன்னொடு
திருமணி இமைக்குங் கோடுயர் மனந்தலை
இரவுடைப் பெண்டி ரிடும்பை நோக்கித்
தெளிவுமனங் கொண்ட தீதறு காட்சி
வெளியன் வேள்மான் விளங்குகரி போல
மலிகடல் உடுத்த மணங்கெழு நனந்தலைப்
பலபா ராட்டவும் படுவ மாதேர்
கடைந்து கவித்தன்ன கால்வீங்கு கருங்கட்
புடைதிரள் வனமுலை புலம்பல் அஞ்சிக்
காமர் நுழை நுண் நுசுப்பின்
தாமரை முகத்தியைத் தந்த பாலே."       (குண நாற்பது)

என வரும்.

அஞ்சவந்த   உரிமைக்கண்ணும்  என்றது-தலைவன் தானும் பிறரும்
அஞ்சும்படியாகத் தலைவிமாட்டு உளதாகிய கற்பாகிய உரிமைக்கண்ணும்
என்றவாறு.

உதாரணம் வந்தவழிக் காண்க.

நன்னெறிப்படரும் தொன்னலப் பொருளினும் என்றது நன்னெறிக்கட்
செல்லாநின்ற தொன்னலப் பொருண்மைக் கண்ணும் என்றவாறு.

நன்னெறியாவது   அறம் பொருளின்பம் வழுவாத நெறி. தலைமகன்
சிறப்புத்   தொன்றுதொட்டு   வருதலிற்   குடிநலத்தைத்   தொன்னல
மென்றார். இதனாற் சொல்லியது அறம் பொருள் இன்பங்களை வழாமல்
தன் குலத்திற்கேற்ற மனைவாழ்க்கையைத் தலைமகள் நடத்துதற்கண்ணும்
தலைவன் கண் கூற்று நிகழும் என்றவாறு.

உதாரணம்

"தடமருப் பெருமை மடநடைக் குழவி
தூண்தொறும் யாத்த காண்தகு நல்லில்
கொடுங் குழை பெய்த செழுஞ்செய் பேதை
சிறுதாழ் செறித்த மெல்விரல் சேப்ப
வாளை ஈர்ந்தடி வல்லிதின் வகைஇப்
புகையுண் டமர்த்த கண்ணள் தகைபெறப்
பிறைநுதற் பொறித்த சீறு நுண் பல்வியர்
அந்துகில் தலையில் துடையினள் நப்புலந்து
அட்டி லோளே அம்மா அரிவை
எமக்கே வருகதில் விருந்தே சிவப்பாள் அன்று
சிறியமுள் எயிறு தோன்ற
முறுவல் கொண்ட முகங்காண் கம்மே."     (நற்றிணை.120)

இதனுள்  ஊடற்குறிப்பின   ளாகிய   தலைவி   மனைவாழ்க்கைத்
தருமமாகிய  விருந்து    புறந்தருதல்  விருப்பினளாதலின்  நன்னெறிப்
படர்தல் ஆயிற்று.

பெற்ற தேஎத்துப் பெருமையின்  நிலைஇக்  குற்றஞ்சான்ற பொருள்
எடுத்துரைப்பினும்  என்றது  -  வரைந்து   பெற்றவழித்  தலைவியைப்
பெருமையின்கண்ணே  நிறுத்திக்   களவுக்  காலத்துக்   குற்றஞ்சான்ற
பொருளை யெடுத்துக் கூறிய வழியும் என்றவாறு.

உதாரணம்

"அதிரிசை யருவிய பெருவரைத் தொடுத்த
பல்தேன் இறாஅல் அல்குநர்க் குதவு
நுந்தை நன்னாட்டு வெந்திறல் முருகென
நின்னோய்க் கியற்றிய வெறிநின் தோழி
என்வயி னோக்கலிற் போலும் பன்னாள்
வருந்திய வருத்தந் தீரநின்
திருந்திழைப் பணைத்தோள் புணர்ந்துவந் ததுவே."

இதனுள்  `நுந்தை  நன்னாட்டு'  என்றதனால் தலைவி பெருமையும்
நின்னோய்க்கியற்றிய வெறி  நின்கோழி  யென்வயினோக்கலிற் போலும்
என்றதனால் குற்றஞ்சான்ற பொருள் என்பது அறிந்து கொள்க.

நாமக்   காலத்   துண்டெனத்   தோழி   ஏமுறு  கடவுள் ஏத்திய
மருங்கினும் என்பது   -  அச்சக்காலத்து  நமக்குத்துணையாயிற்றெனத்
தோழி  ஏமுறு கடவுளை ஏத்துதற்கண்ணும் தலைவன்கட் கூற்று நிகழும் என்றவாறு.

உதாரணம் வந்தவழிக் காண்க.

அல்லல்  தீர   ஆர்வமொடு   அளைஇச்  சொல்லுறு  பொருளின்
கண்ணும் என்பது - தலைவி தன் துன்பந்தீர ஆர்வத்தொடு பொருந்தச்
சொல்லப்பட்ட   பொருண்மைக்கண்ணும்  தலைவன்  கூற்று   நிகழும்
என்றவாறு. என்றது   களவுக்காலத்து  வருந்திய  வருத்தந்தீரத்  தனது
காதல்  மிகுதி தோன்றச் சொல்லுதற் பொருளின்கண்ணும் என்றவாறு.

உதாரணம்

"யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதுஞ்
செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே"        (குறுந்.40)

என வரும்.

சொல்லென    ஏனது  சுவைப்பினும்  நீ  கை தொட்டது வானோர்
அமிழ்தம் புரையுமால் எமக்கென  அடிசிலும்  பூவுந்தொடுத்தற்கண்ணும்
என்பது  - யாதானும்  ஒன்றை   நுகரினும்  நீ  கையால்   தொட்டது
வானோர் அமிழ்தம் புரையும், இதற்குக் காரணம் சொல்லுவாயாக என்று
அடிசில் தொடுத்தற்கண்ணும்  பூத்தொடுத்தற்கண்ணும்  கூற்று  நிகழும்
என்றவாறு.   வந்தது   கொண்டு  வாராதது  முடித்தல்  என்பதனால்,
சாந்து முதலியனவும் கொள்க.

உதாரணம் வந்தவழிக் காண்க.

"வேம்பின் பைங்காயென் தோழி தரினே
தேம்பூங் கட்டி"                          (குறுந்.196)

எனத் தலைவன் கூறினமை தோழி கூறலானும் அறிக.

அந்தணர்  திறத்தும்   சான்றோர்  தேஎத்தும்  அந்தமில் சிறப்பிற்
பிறர்  பிறர் திறத்தினும்  ஒழுக்கம்  காட்டிய  குறிப்பினும்  என்பது  -
பார்ப்பார்  கண்ணும்  சான்றோர்  கண்ணும்  மிக்க  சிறப்பினையுடைய
பிறராகிய அவரவரிடத்தும் ஒழுகும் ஒழுக்கத்தைக் குறிப்பினால் காட்டிய
இடத்தினும் என்றவாறு.

உதாரணம்