இளம்பூரணர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   104
Zoom In NormalZoom Out


 

மாதோ பிரிதுநாம் எனினே."                 (அகம்.5)

என வரும்.

தானவட்   பிழைத்த   நிலையின்கண்ணும்  என்பது  -  தலைவன்
தலைவியை   நின்னிற்    பிரியேன்    என்ற   சொல்லிற்  பிழைத்த
நிலையின்கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு.

பிழைத்தலாவது பிரிதல்:

"வயங்குமணி பொருத வகையமை வனப்பிற்
பசுங்காழ் அல்குல் மாஅ யோளொடு
வினைவனப் பெய்திய புனைபூஞ் சேக்கை
விண்பொரு நெடுநகர்த் தங்கி இன்றே
இனிதுடன் கழிந்தன்று மன்னே நாளைப்
பொருந்தாக் கண்ணேம் புலம்புவந் துறுதரச்
சேக்குவங் கொல்லோ நெஞ்சே சாத்தெறிந்து
அதர்கூட் டுண்ணும் அணங்குடைப் பகழிக்
கொடுவில் ஆடவர் படுபகை வெரீஇ
ஊரெழுந் துலறிய பீரெழு முதுபாழ்
முருங்கை மேய்ந்த பெருங்கை யானை
வெரிந்ஓங்கு சிறுபுறம் உரிஞ ஒல்கி
இட்டிகை நெடுஞ்சுவர் விட்டம் வீழ்ந்தென
மணிப்புறாத் துறந்த மரஞ்சோர் மாடத்து
எழுதணி கடவுள் போகலிற் புல்லென்று
ஒழுகுபலி மறந்த மெழுகாப் புன் திணைப்
பானாய் துன்னிய பறைக்கட் சிற்றில்
குயில்காழ் சிதைய மண்டி அயில்வாய்க்
கூர்முகச் சிதலை வேய்ந்த
போர்முடி நல்லிறைப் பொதியி லானே."       (அகம்.167)

என வரும்.

உடன்   சேறற்   செய்கையொடு   என்பது   -   உடன்   போக
வேண்டுமெனச்  சொல்லிய  வழியும்  என்றவாறு.  ஒடு எண்ணின் கண்
வந்தது.

"செருமிகு சினவேந்தன்" என்னும் பாலைக் கலியுள்,

"எல்வளை எம்மொடு நீவரின் யாழநின்
மெல்லியல் மேவந்த சீறடித் தாமரை
அல்லிசேர் ஆயிதழ் அரக்குத்தோய்ந் தவைபோலக்
கல்லுறின் அவ்வடி கறுக்குந அல்லவோ."       (கலித்.13)

அன்னவை பிறவும்  மடம்பட வந்த தோழிக்கண்ணும்  என்பது  -
மேற்சொல்லப்   பட்டவையிற்றினும்  மடமைபட  வந்த தோழிமாட்டும்
கூற்று நிகழும் என்றவாறு.

அவையாவன:

"இல்லென இரந்தோர்க்கொன் றீயாமை இழிவெனக்
கல்லிறந்து செயல்சூழ்ந்த பொருள்பொரு ளாகுமோ."
                                        (கலித்.2)

என வரும்.

இந்நிகரன  கூறியவழித் தலைவன்  கூற்று நிகழும். இவ்வழிக் கூறுங்
கூற்றுக்  காமமாகத்  தோன்றாது  பொருளாகத் தோன்றும். காமத்திற்கு
மாறாகக் கூறல் வேண்டுதலின்,

"இன்பம் விழையான் வினைவிழைவான் தான்கேளிர்
துன்பந் துடைத்தூன்றுந் தூண்."             (குறள்.615)

என வரும்.

வேற்றுநாட்டகல்வயின்   விழுமத்தானும்   என்பது  வேற்று நாட்டு
அகலும்வழி வரும் நோயின் கண்ணும் என்றவாறு.

அஃதாவது,  பிரிவு  ஒருப்பட்ட   பின்புபோவேமோ  தவிர்வேமோ
எனச் சொல்லும் மனநிகழ்ச்சி .

உதாரணம்

"உண்ணா மையின் உயங்கிய மருங்கின்
ஆடாப் படிவத் தான்றோர் போல
வரைசெறி சிறுநெறி நிரைபுடன் செல்லும்
கான யானை கவினழி குன்றம்
இரந்துபொருள் தருதலும் ஆற்றாய் சிறந்த
சில்ஐங் கூந்தல் நல்லகம் பொருந்தி
ஒழியின் வறுமை யஞ்சுதி அழிதக
உடைமதி வாழிய நெஞ்சே நிலவென
நெய்கனி நெடுவேல் எஃகிலை இமைக்கும்
மழைமருள் பஃறோல் மாவண் சோழர்
கழைமாய் காவிரிக் கடல்மண்டு பெருந்துறை
இறவொடு வந்து கோதையொடு பெயரும்
பெருங்கடல் ஓதம் போல
ஒன்றிற் கொள்ளாய் சென்றுதரு பொருட்கே."  (அகம்.123)

என வரும்.

மீட்டுவர வாய்ந்த வகையின்  கண்ணும் என்பது - பிரிந்த தலைவன்
மீட்டு வரவு வாய்ந்த வகையின்கண்ணும் என்றவாறு.

`வரவு' என்பது கடைகுறைந்தது.

உதாரணம்

"தாழிருள் துமிய மின்னித் தண்ணென
வூழுறை இனிய சிதறி ஊழிற்
கடிப்பிடு முரசின் முழங்கி இடித்திடித்துப்
பெய்யினி வாழியோ பெருவான் யாமே
செய்வினை முடித்த செம்மல் உள்ளமொடு
இவளின் மேவின மாகிக் குவளைக்
குறுந்தாள் நாள்மலர் நாறும்
நறுமென் கூந்தல் மெல்லணை யேமே"        (குறுந்.270)

இது வந்து புகுந்த தலைவன் கூற்று.

அவ்வழிப்  பெருகிய  சிறப்பின்  கண்ணும்  என்பது  -  தலைவன்
பிரிந்துழிப் பெருகிய சிறப்பினும் கூற்று நிகழும் என்றவாறு.

"கோடல் எதிர்முகைப் பசுவீ முல்லை
நாறிதழ்க் குவளையொ டிடைப்பட விரைஇ
ஐதுதொடை மாண்ட கோதை போல
நறிய நல்லோள் மேனி
முறியினும் வாயது முயங்குகம் இனியே"        (குறுந்.62)

என வரும்.

பேரிசை யூர்திப் பாகர் பாங்கினும் என்பது- தானுற்றவின்பத்தினைப்
பாகற்குக் கூறுதற்கண்ணும் என்றவாறு.

உதாரணம்

"மறத்தற் கரிதால் பாக பன்னாள்
வறத்தொடு பொருந்திய உலகுதொழிற் கொளீஇய
பழமழை பொழிந்த புதுநீர் அவல
நாநவில் பல்கிளை கறங்க நாவுடை
மணியொலி கேளாள் வாணுதல் அதனால்
ஏகுமின் என்ற இளையர் வல்லே
இல்புக் கறியுந ராக மெல்லென