இளம்பூரணர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1164
Zoom In NormalZoom Out


என்றக்கால்,    இளமை பெருமையை நோக்கி நின்றதன்று, கூத்தன்
என்னும்   பெயரையே   நோக்கி  நின்றதென  வுணர்க.  ‘நடைபெற்று
இயலும்’ எனல் வேண்டா எனின், நடை என்பது 

* பரிமாணச் சூத்திரம் -- பிரதிபேதம். 

வழக்கு,   வழக்கினுள்   மயங்காது  வரும்  என்பதாம்  ;  என்னவே,
செய்யுளுள் மயங்க வரும் என்பதாம். 

வரலாறு:  *  ‘பெருந்தோட்  சிறு - மருங்குற் பேரமர்க்கட் பேதை’
எனவரும். (26) 

27.  ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியும்
ஒன்றனைக் கூறும் பன்மைக் கிளவியும்
வழக்கி னாகிய வுயர்சொற் கிளவி
இலக்கண மருங்கிற் சொல்லா றல்ல.
 

இச்    சூத்திரந்    என்னுதலிற்றோவெனின்,    வழீஇ   யமையுமாறு
உணர்த்துதல் நுதலிற்று. 

உரை:   உயர்திணையொருவரைப்   பன்மையாற்   சொல்லுதலும்
அஃறிணை  ஒன்றினைப்  பன்மையாற்  சொல்லுதலும்  வழக்கினகத்து
உயர்த்துச்  சொல்லப்படும்  ; இலக்கண முறைமையாற் சொல்லுமிடத்து
நெறியல்ல என்றவாறு, 

ஒருவனையும், ‘தாம் வந்தார்’ என்ப.  ஒன்றனையும்,  ‘தாம் வந்தார்’
என்ப.   மற்று,   ‘இலக்கண   மருங்கிற்   சொல்லா   றல்ல’   எனல்
வேண்டாவாகலால்,  உயர்திணையை அஃறிணை போலச் சொல்லுதலும்,
அஃறிணையை உயர்திணை போலச் சொல்லுதலும் கொள்க. 

வரலாறு: ‘என்  பாவை  வந்தது,  போயிற்று’  என ஒருத்தியையும்,
‘என்  அன்னை  வந்தாள், போயினாள்’ என ஓர் ஆவினையும், காதன்
மிகுதியான் இவ்வாறு கூறுக எனக் கொள்க. 

இனி, ‘வழக்கினாகிய’ என்றதனான், ‘கன்னி யெயில், கன்னி ஞாழல்’
என்பன கொள்க. (27) 

* யாப்பருங்கல விருத்தி யுரை மேற்கோள்.

நுசுப்பிற்--பாடபேதம். 

28,  செலவினும் வாவினுந் தரவினுங் கொடையினும்
நிலைபெறத் தோன்று மந்நாற் சொல்லுந்
தன்மை முன்னிலை படர்க்கை யென்னும்
அம்மூ விடத்து முரிய வென்ப.
 

இச் சூத்திரம் என்னுதலிற்றோவெனின், இட வழுக்காத்தல் நுதலிற்று. 

உரை:   செல்லும்,  வரும்,  தரும் கொடுக்கும் என நிலைபெற்றும்
புலப்பட்டு   நின்ற   இந்  நான்கு  சொல்லும்  தன்மை,  முன்னிலை,
படர்க்கை என்னும் மூன்றிடத்திற்கும் உரிய என்றவாறு. 

அவையாமாறு முன்னர்ச் சொல்லுதும். (28) 

29.  அவற்றுள்
தருசொல்