இதுவும் மரபு வழுக்காத்தல் நுதலிற்று.
உரை:
இரட்டித்துச் சொல்லும் சொற்கள் அவ்விரட்டுதலிற் பிரித்துச் சொல்லப்படா என்றவாறு.
வரலாறு: சுருசுருத்தது, சுறுசுறுத்தது, கறுகறுத்தது என, இசையுங் குறிப்பும் பண்பும் பற்றி வரும்.
49.
ஒருபெயர்ப் பொதுச்சொ லுள்பொரு ளொழியத்
தெரிபுவேறு கிளத்த றலைமையும் பன்மையும்
உயர்திணை மருங்கினு மஃறிணை மருங்கினும்.
இச் சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இதுவும் மரபு வழுக்காத்தல் நுதலிற்று.
உரை:
ஒரு பெயர்ப்பட நின்ற பொதுச் சொற்களைச் சொல்லுங்கால் ஆண்டுள்ள பொருள் எல்லாம்
எடுத்துச் சொல்லாது, தெரிபு வேறுகிளந்து தலைமையானும் பன்மையானும் கூறுக, இரு திணைக்கண்ணும் என்றவாறு.
வரலாறு: சேரி என்பது பலர் இருப்பதுமன் : ஆயினும், ஆண்டுச் சில பார்ப்பனக் குடி உளவேல், அதனைப் பார்ப்பனச் சேரி என்பது ; இஃது உயர்திணைக்கண் தலைமைபற்றி வந்தது.
அத் திணைக்கண் பன்மைபற்றி வருமாறு :
எயின நாடு, குற்றிளை நாடு என வரும்.
இனி, அஃறிணைக்கண் தலைமைபற்றி வருமாறு: கமுகந்தோட்டம் என வரும்; மற்றைய பொருள் பயின்று, கமுகு ஒன்றிரண்டு உண்மை நோக்கிச் சொன்னாரேல் தலைமையாம். இனிக் கமுகு ஆண்டு நெருங்கி மற்றைய சிலவாதல் கண்டு சொன்னாரேல் அதுவே பன்மையாற் பெற்ற பெயருமாம் :
ஒடுவங் காடு, காரைக் காடு என்பன பன்மையாற் பெற்ற பெயர்.
(49)
50.
பெயரினுந் தொழிலினும் பிரிபவை யெல்லா
மயங்கல் கூடா வழக்குவழிப் பட்டன.
இச் சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இதுவும் மரபு வழுக்காத்தல் நுதலிற்று.
உரை:
மேனின்ற அதிகாரத்தால் உயர்திணைக்கண்ணும் அஃறிணைக்கண்ணும் பெரியனானும் தொழிலினானும் பிரிந்து வருமவை யெல்லாம் மயங்குதற்குச் செல்ல; வழக்கு வழிபட்டன ஆகலான்
|