என்பது, என்றவாறு.
அவைதாம் பெண்ணொழி மிகுசொல்லும், ஆணொழி மிகுசொல்லும் என இருவகைப்படும்.
வரலாறு :
உயர்திணைக்கண் பெயரிற் பிரிந்த பெண்ணொழி மிகுசொல் வருமாறு: ‘வடுகரசர் ஆயிரவர் மக்களை யுடையர்’ எனவரும்.
அத்திணைக்கண் பெயரிற் பிரிந்த ஆணொழி மிகுசொல் வருமாறு: ‘பெருந்தேவி பொறையுயிர்த்த கட்டிற்கண் நால்வர் மக்கள் உளர்’ எனவரும்.
இனி, அத்திணைக்கண் தொழிலிற் பிரிந்த பெண்ணொழி மிகுசொல் வருமாறு: ‘அரசர் ஆயிர மக்களொடு தாவடிபோயினார்’ எனவரும்.
அத்திணைக்கண் தொழிலிற் பிரிந்த ஆணொழி மிகுசொல்
வருமாறு; ‘இன்று இவ்வூரெல்லாம் தைநீர் ஆடுப’ எனவரும்.
இனி, அஃறிணைக்கண் வருமாறு : ‘நம்மரசன் ஆயிரம் யானையுடையன்’ என வரும்.
இஃது அத் திணையிற் பெயரிற் பிரிந்த பெண்ணொழி மிகு சொல்:
‘நம்பி நூறு எருமை யுடையன்’ என வரும்; இஃது அத் திணையிற் பெயரிற்பிரிந்த ஆணொழி மிகுசொல்.
இனி, அத் திணைக்கண் தொழிலிற்பிரிந்து வருமாறு : ‘இன்று இவ்வூர்ப்
பெற்ற மெல்லாம் உழவொழிந்தன’ என வரும்; இஃது அத் திணைக்கண் தொழிலிற் பிரிந்த பெண்ணொழி மிகுசொல்.
‘இன்று இவ்வூர்ப் பெற்றமெல்லாம் அறங் கறக்கும்’ என வரும்; இஃது அத் திணைக்கண் தொழிலிற் பிரிந்த ஆணொழி மிகுசொல்.
இனி, ‘எல்லாம்’ என்றதனால், ஆணொழி மிகு சொல்லும், பெண்ணொழி மிகுசொல்லும் அன்றிச் சிறப்புப் பற்றி நிற்பனவும், பொதுவாய் நிற்பனவும், மிகுதி வகையான் நிற்பனவும் கொள்க. அவை வருமாறு :
‘அரசர் பெருந்தெரு’ என்பது சிறப்புப் பற்றி வந்தது.
‘ஆ தீண்டு குற்றி’ ‘ஆனதர்’ என்பன பொதுவாய் நிற்பன.
இனி, மிகுதிவகையாற் சொல்லுவன வருமாறு : ‘இவர் பெரிதுங் கால்கொண் டோடுப’ -- ‘இவர் பெரிதுஞ் சோறுண்ப’ எனவரும் உயர்திணைக்கண்.
|