இளம்பூரணர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1179
Zoom In NormalZoom Out


தனவும்,   பிறவும்  அந்நிகரன   எல்லாம்   உயர்திணையல்லவும்,
உயர்திணைப் பொருளைச் சார்ந்து  நிகழுங்குணங்களும், உயர்திணைப்
பொருளைப்   பற்றுக்கோடாக   நிகழ்தலின்,   உயர்திணையைப்போல
வழங்கல்  வேண்டுமே  யெனினும்,  அஃறிணையைச்  சொல்லியாங்குச்
சொல்லுக என்றவாறு. 

வரலாறு: 

அவர்க்குக் குடிமை நன்று : . . . . . . குடிமை. 

அவர்க்கு ஆண்மை நன்று : . . . . . . ஆண்மை. 

அவர்க்கு இளமை நன்று : . . . . . . இளமை. 

அவர்க்கு மூப்பு நன்று : . . . . . . மூப்பு. 

அவர்க்கு அடிமை நன்று : . . . . . . அடிமை. 

அரசு வன்மை நன்று : . . . . . . வன்மை. 

விருந்து வந்தது : . . . . . . விருந்து. 

அக்குழு நன்று : . . . . . . குழூஉ. 

பெண்மை அடங்கிற்று : . . . . . . பெண்மை. 

அரசு நிலைத்தது : . . . . . . அரசு. 

மகவு நலிந்தது : . . . . . . மகவு. 

குழவி யழுதது : . . . . . . குழவி. 

என வரும். 

அலி வந்தது -- இது தன்மை திரிபெயர். 

குருடு வந்தது -- இஃது உறுப்பின் கிளவி. 

‘என் காதல் பொலிவாயிற்று’ 

‘என் யானை வந்தது’ 

இவை  முறையே  காதலும்  சிறப்பும்   கெழீஇ   வந்தன.  காதல்
கிள்ளையினையும், யானை மகவினையும் பற்றி வந்தன. 

கெழீஇயிலி வந்தது -- இது செறற்சொல். 

விறற்சொல் விறலை யுணர்த்துதல் ; அது, 

‘பெருவிறல் வந்தது’ 

என வரும். 

பேடி வந்தது, குரிசில் வந்தது 

என்னுந் தொடக்கத்தனவும் அறிந்துகொள்க. 

இதுவும் ஒருசார் ஆசிரியன் உரைப்பது : 

இனிக்   குடிமை யாண்மை என்றித்தொடக்கத்தன ஒருவன், ஒருத்தி,
பலர்   என்னும்  மூன்று  பாற்கும்  பொதுவாய்ப்  பின்  முடியுங்கால்
அஃறிணை  முடிபிற்றாக  என்பது.  வன்மை  என்பது மூன்று பாற்கும்
பொதுவாய்  நிற்பது யாண்டுப் பெறுதுமோ எனின், வழக்குப் பெற்றுழிக்
கொள்க. (57) 

58.  கால முலக முயிரே யுடம்பே
பால்வரை தெய்வம் வினையே பூதம்
ஞாயிறு திங்கள் சொல்லென வரூஉம்
ஆயீ ரைந்தொடு பிறவு மன்ன
ஆவயின் வரூஉங் கிளவி யெல்லாம்
பால்பிரிந் திசையா