ருங் கொற்றன், பெருஞ் சாத்தன் என வரும்.
அற்றன்று, அவையும் ஆண்டே யடங்கும் ; மற்றென்னை கருதியது
எனின், இஃது அருத்தாபத்தி பெற்றது என்க.
‘விதந்த மொழியினம் வேறுஞ் செப்பும்’
என்பது பரிமாண சூத்திரம். இதுவும் அப்பொருட்டு.
வரலாறு : ‘மேலைச்சேரிக்
கோழி அலைத்தது’ என, ‘கீழைச்சேரிக்
கோழி அலைப்புண்டமை’ சொல்லாமையே முடிந்ததாம் ; ‘குடங் கொண்டான்
வீழ்ந்தான்’ என்றவழிக் குடம் வீழ்ந்தமை சொல்லாமையே முடிந்ததாம்.
இந்நிகரன இனஞ் செப்பின. ‘செப்பலும் உரித்து’ எனவே செப்பாதன, ‘ஆ
வாழ்க, அந்தணர் வாழ்க’ என்றவழி, ஒழிந்தனவும், ஒழிந்தாரும் சாக என்றவாறு அன்று என்பதாம். (61)
62. கண்ணுந் தோளு முலையும் பிறவும்
பன்மை சுட்டிய சினைநிலைக் கிளவி
பன்மை கூறுங் கடப்பா டிலவே
தம்வினைக் கியலு மெழுத்தலங் கடையே.
இச் சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், திணைவழுக்காத்தல் நுதலிற்று.
உரை :
கண்ணும் தோளும் முலையும் பிறவும் பன்மைப்
பாலாற்
கூறுதல் கடப்பாடில, தம் வினைக்கியலும்
எழுத்தல்லாதவிடத்து என்றவாறு.
வரலாறு : கண் நல்லள்,
தோள் நல்லள், முலை நல்லள்
எனவரும்.
‘பிறவும்’ என்றதனால்,
புருவம் நல்லள், காது நல்லள்
என்பனபோல்வன கொள்க.
இனி, ஒருமை சுட்டிய சினைக்கிளவி ஒருமை கூறும் கடப்பாடில்லன.
அவற்றிற்கு ஒத்து என்னை பிறவெனின், மேற், ‘கால முலகம்’ (கிளவி -
58) என்று திணைவழுக்காத்து வாராநின்ற
அதிகாரத்திடையே, ‘எடுத்த
மொழி யினஞ் செப்பலு முரித்தே’ (கிளவி - 61) என்னும் சூத்திரத்தை
இடனன்றி வைத்தார் ; அது நிலமாகத் தந்து
உரைத்தவற்றையும்
கொள்க என்பது.
வரலாறு :
மூக்கு நல்லள், கொப்பூழ் நல்லள் என வரும். (62)
முதலாவது கிளவியாக்கம் முற்றிற்று.
|