இளம்பூரணர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1188
Zoom In NormalZoom Out


வினையும்   வினைக்குறிப்பும்  பற்றி  வருவன  வெல்லாம்  முதலாய்
வரூஉம்  எவ்வகைப்  பட்ட  சொல்லும்  இவ்விரண்டாம் வேற்றுமைக்
கூற்றன என்ப என்றவாறு. (10) 

73.  மூன்றாகுவதே
ஒடுவெனப் பெரிய வேற்றுமைக் கிளவி
வினைமுதல் கருவி யனைமுதற் றதுவே
யதனி னியற லதற்றகு கிளவி
யதன்வினைப் படுத லதனி னாத
லதனிற் கோட லதனொடு மயங்க
லதனோ டியைந்த வொருவினைக் கிளவி
யதனோ டியைந்த வேறுவினைக் கிளவி
யதனோ டியைந்த வொப்ப லொப்புரை
யின்னா னேது வீங்கென வரூஉ
மன்ன பிறவு மதன்பால வென்மனார்.
 

இச்   சூத்திரம்   என்னுதலிற்றோ  வெனின்,  முறையானே  மூன்றாம்
வேற்றுமை யுணர்த்துதல் நுதலிற்று. 

உரை  : மூன்றாம்  எண்ணு  முறைமைக்கண்ணது  ஒடு  என்னும்
பெயரையுடைய  வேற்றுமைச் சொல் ; அது  வினை முதலும் கருவியும்
என இரண்டினையும் தனக்குப் பொருளாக உடையது என்றவாறு. 

வரலாறு :  ‘நாயாற் கோட்பட்டான்’  என்பது  வினை  முதல்பற்றி
வந்தது. ‘வேலால் எறிந்தான்’ என்பது கருவிபற்றி வந்தது. 

‘தச்சன் செய்த சிறுமா வையம்’         (குறுந்தொகை-61.) 

இது தச்சனாற் செய்யப்பட்டது என்பதாம். 

அதற்றகு கிளவி :

‘வாயாற்றக்கது வாய்ச்சி’ என்பது. 

அதன் வினைப்படுதல் :

‘நாயாற் கோட்பட்டான்’ என்பது. 

அதனினாதல் :

‘வாணிகத்தானாயினான்’ என்பது. 

அதனிற் கோடல் :

‘காணத்தாற் கொண்ட அரிசி’ என்பது. 

அதனொடு மயங்கல் :

‘எள்ளொடு விராஅய அரிசி’ என்பது. 

அதனோடு இயைந்த ஒருவினைக் கிளவி :

‘சாத்தனொடு வந்தான் கொற்றன்’ என்பது. 

அதனொடியைந்த வேறுவினைக் கிளவி :

‘மலையொடு பொருத மாஅல் யானை’