இளம்பூரணர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1189
Zoom In NormalZoom Out


என்பது. 

அதனொடியைந்த வொப்பல் ஒப்புரை :

‘முத்தொடு முழாக் கோத்து’ என்பது. 

ஒவ்வாததனை ஒப்பித்தல் ஒப்பலொப்புரை. 

இன்னான்  என்புழியும்  ஏது  வினைக்கண்ணும்  வரும்  மூன்றாம்
வேற்றுமை.   இன்னான்  என்பது,  ‘கண்ணாற்  கொத்ததை,  காலான்
முடவன்’ என்பன. 

ஏது என்பது, ‘முயற்சியாற் பிறத்தலான் சொல்லு நிலையாது’
என்பது. 

அன்ன பிறவும் என்றதனால், பிறவும் வருவன எல்லாம் கொள்க. (11) 

74.  நான்கா குவதே
குஎனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
யெப்பொரு ளாயினுங் கொள்ளு மதுவே
யதற்குவினை யுடைமையி னதற்குடம் படுதலி
னதற்குப்படு பொருளி னதுவாகு கிளவியி
னதற்கியாப் புடைமையி னதற்பொருட் டாதலி
னட்பிற் பகையிற் காதலிற் சிறப்பினென்
றப்பொருட் கிளவியு மதன்பால வென்மனார்.
 

இச்   சூத்திரம்   என்னுதலிற்றோ  வெனின்,  முறையானே  நான்காம்
வேற்றுமை உணர்த்துதல் நுதலிற்று. 

உரை   :   நான்காம்   எண்ணுமுறைக்கண்ணது   கு   என்னும்
பெயரையுடைய    வேற்றுமைக்   கிளவி   ;   ஈவதோர்   பொருளை
யேற்கநிற்கும் அதுவே என்பது. 

வரலாறு : ‘சாத்தற்குச் சோறு’ என வரும். 

‘எப்பொரு ளாயினும்’ என்றார், மூன்றிடத்துப் பன்மை நோக்கி. 

அதற்கு வினையுடைமை :

‘கரும்பிற்கு வேலி’ என்பது. 

அதற்குடம்படுதல் :

‘சாத்தற்கு மகளுடம்பட்டார் சான்றோர்’ என்பது. 

அதற்குப் படுபொருள் :

‘சாத்தற்குப் படுபொருள் கொற்றன்’ என்பது. 

அதுவாகு கிளவி :

‘கடி சூத்திரத்திற்குப் பொன்’ என்பது. 

அதற்கியாப்புடைமை :

‘கைக்கியாப் புடையது கடகம்’ என்பது. 

அதன் பொருட்டாதல் :

‘கூழுக்குக் குற்றேவல் செய்யும்’ என்பது. 

நட்பு :

‘நாய்க்கு நட்புடையன்’ என்பது. 

பகை :

‘மக்கட்குப் பகை பாம்பு’ என்பது. 

காதல் :

‘தாய்க்குக் காதலன்’ என்பது. 

சிறப்பு :

‘வடுகரசர்க்குச் சிறந்தார் சோழியவரசர்’ என்பது.