மூன்றாவது
வேற்றுமை மயங்கியல்
80. கரும மல்லாச் சார்பென் கிளவிக்
குரிமையு முடைத்தே கண்ணென் வேற்றுமை.
என்பது சூத்திரம்.
இவ்வோத்து என்ன பெயர்த்தோவெனின்,
வேற்றுமை தம்மின் மயங்கினமை உணர்த்தினமையின்,
வேற்றுமை மயங்கியல் என்னும் பெயர்த்து.
இத் தலைச் சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இரண்டாவதனொடு
ஏழாவது மயங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று.
உரை : இரண்டாவது
கருமச்சார்பும் கருமமல்லாச் சார்பும் என இருபொருள் உடைத்து : தூணைச் சார்ந்தான் என்பது, கருமச் சார்பாவது; அதனையுறச் சாருமாதலால். இனி, அரசரைச் சார்ந்தான் என்பது கருமமில் சார்பு. அக் கருமமில் சார்ச்சிப்
பொருண்மைக்கண் ஏழாவது வருதல் உரிமை யுடைத்து என்பது.
வரலாறு :
அரசரைச் சார்ந்தான் என்புழி அரசர்கட் சார்ந்தான்
என்பதும் ஆக என்பது. (1)
81. சினைநிலைக் கிளவிக் கையுங் கண்ணும்
வினைநிலை யொக்கு மென்மனார் புலவர்.
இச் சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இதுவும் இரண்டாவதனோடு ஏழாவதன் மயக்கமே கூறுதல் நுதலிற்று.
உரை : சினைப்பொருட்கு
இரண்டாம் வேற்றுமையும் ஏழாம்
வேற்றுமையும் ஒத்த கிழமையவாம் என்றவாறு.
வரலாறு :
கண்ணைக் குத்தினார், கண்ணுட் குத்தினார் என வரும். (2)
82.
கன்றலுஞ் செலவு மொன்றுமார் வினையே.
இச் சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இதுவும் அவை இரண்டன் மயக்கமே யுணர்த்துதல் நுதலிற்று.
உரை : கன்றல்
செலவு என்னும் பொருட்கு இரண்டாவதும்
ஏழாவதும் தொழிலான் ஒக்கும் என்றவாறு.
வரலாறு :
தினைக் கன்றினான், சூதின்கட் கன்றினான் ; நெறியைச்
சென்றான், நெறிக்கட் சென்றான் என வரும். (3)
83. முதற்சினைக் கிளவிக் கதுவென் வேற்றுமை
முதற்கண் வரினே சினை
|