னக்கை வருமே.
இச் சூத்திரம் என்னுதலிற்றோ வெனின்,
‘சினைநிலைக் கிளவிக் கையுங் கண்ணும்’ (சூத்தி. 2) என்னும் சூத்திரத்திற்குப் புறனடை யுணர்த்துதல் நுதலிற்று.
உரை : முதலும் சினையும் தொடருங்கால் முதற் பொருட்கண் ஆறாவது வருமேயெனின், சினைப்பொருட்கு இரண்டாவது வருக என்றவாறு.
வரலாறு :
‘யானையது கோட்டைக் குறைத்தான்’ என வரும். (4)
84. முதன்முன் னிலைவரிற் கண்ணென் வேற்றுமை
சினைமுன் வருத றெள்ளி தென்ப.
இச் சூத்திரம் என்னுதலிற்றோ வெனின்,
இதுவும் அதற்கே புறனடை
யுணர்த்துதல் நுதலிற்று.
உரை : முதற்
பொருட்கு இரண்டாவது வருமே யெனின்,
சினைப்பொருட்கண் ஏழாவது வருதல் தெளிவுடைத்து என்றவாறு.
வரலாறு : யானையைக்
கோட்டுக்கட் குறைத்தான்’ என வரும்.
‘தெள்ளிது’ என்றதனால், ‘யானையைக்
கோட்டைக் குறைத்தான்’
எனலுமாம். (5)
85.
முதலுஞ் சினையும் பொருள்வேறு படாஅ
நுவலுங் காலைச் சொற்குறிப் பினவே.
இச் சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், ஐயமறுத்தல் நுதலிற்று.
உரை : இதுதான்
சொல்லுவான் குறிப்பொடு படுத்தவிடத்துச்
சினைதான் முதலுமாம் என்றவாறு.
வரலாறு : கோட்டது நுனியைக் குறைத்தான் ; கோட்டை நுனிக்கட்
குறைத்தான் ; கோட்டை நுனியைக் குறைத்தான், எனச் சொல்லுவான் குறிப்பொடு படுத்தவிடத்துச் சினைதான் முதலுமாயிற்று. முதல் சினையாவது வந்தவழிக் கண்டுகொள்க. (6)
86. பிண்டப் பெயரு மாயிய றிரியா
பண்டியன் மருங்கின் மரீஇய மரபே.
இச் சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இதுவும் ஐயமறுத்தல் நுதலிற்று.
உரை : பிண்டப் பெயரும்
அதுவே ; தெரியில் அப் பொருளின்
வேறு பிண்டம் ஒன்றில்லை விலக்கப்பட்டுக் கிடந்தது. வழங்குமாற்றல் உண்டு போலுமாம் என்பது பிண்டப் பெயர் என்றவாறு.
உறுப்பின் கிழமை
|