இளம்பூரணர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1300
Zoom In NormalZoom Out


று. 

அவற்றுள் வினையிற் றோன்றியது : 

‘உடலு முடைந்தோடு மூழ்மலரும் பார்க்குங்
கடலிருளாம் பல்பாம் பென்னக்
கெடலருஞ்சீர்த் திங்க * டிருமுகமாய்ச் சேர்ந்து’
 

என்பது,   உடலும்   உடைந்தோடும்   பார்க்கும்   மலரும்   என்ற
வினைச்சொற்கள் தம்முள் பொருளியைபு இன்றி வேறு நின்றன. இனிக்
கடல்   இருள்   ஆம்பல்  பாம்பு  என  நின்ற  பெயர்ச்  சொல்லும்
அவ்வாறே நின்றமை யறிக. 

* ‘டிருமுகமாச் செத்து’ பிரதிபேதம். 

அவை தம்முள் பொருளியையுமாறு : 

உடலுங்  கடல், உடைந்தோடும் இருள், மலரும் ஆம்பல், பார்க்கும்
பாம்பு எனக் கூட்டுக. 

இனிப் பெயர் நிரனிறை வருமாறு : 

‘கொடிகுவளை கொட்டைநுசுப் புண்கண் மேனி’ 

எனவரும். 

இனி,  அவை  பொருள்கொள்ளுங்கால்,  கொடி  நுசுப்பு,  குவளை
உண்கண், கொட்டை மேனி என வரும். 

‘நினையத்  தோன்றும்’ என்றதனான், மொழிமாற்றுப்  போல நிற்கும்
நிரனிறையும் உள என்பது. 

‘களிறுங் கந்தும் போல நளிகடற்
கூம்புங் கலனுந் தோன்றும்’
 

என  வரும்.  களிறும்  கந்தும்   முறையானே  கலனும்   கூம்பும்
எனற்பால ; அவ்வாறு கூறாது, ‘கூம்பும் கலனும்’ என்றமையான், மயக்க
நிரனிறை யாயிற்று என்பது. (9) 

400. சுண்ணந் தானே
பட்டாங் கமைந்த வீரடி யெண்சீ
ரொட்டுவழி யறிந்து துணித்தன ரியற்றல்.
 

இச்சூத்திரம்   என்னுதலிற்றோ    வெனின்,   நிறுத்த   முறையானே
சுண்ணம் என்னும் பொருளாமாறு உணர்த்துதல் நுதலிற்று. 

உரை : சுண்ணம்   எனப்படுப   இரண்டடியால்   எட்டுச்  சீராற்
பொருந்துமாறு அறிந்