நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   486
Zoom In NormalZoom Out


ரைக்கிளவி’  (7)   என்றதனான்  பெற்றாம். ‘ஈற்றின் நின்று இசைக்கும்’
என்றது,   னகரம்  முதலிய  இரண்டற்கும்  ஞாபகம்; அல்லனவற்றிற்கு
அனுவாதம்.  அவை  னகாரமும் ளகாரமும் ரகாரமும் பகாரமும் மாரும்
துவ்வும்  றுவ்வும்  டுவ்வும்  அவ்வும்  ஆவும் வவ்வும். இது விரித்தது
தொகுத்தது.  வினையியலுள்  வினைக்கு  ஈறுபற்றி  ஓதிப் பெயரியலுள்
பெயர்கள்  தம்மையே  எடுத்து  ஓதினமையானும்,  இப்பதி னோரீறும்
பெயர்க்கண்   திரிபுடையவாய்  வருதலானும்,  பெயர்க்கு  இவ்வீறுகள்
கோடல் ஆகாமை உணர்க. (10) 

பெயரும் வினையும் ஒத்த பாலொடு வருதல்

11. வினையின் தோன்றும் பாலறி கிளவியும்
பெயரின் தோன்றும் பாலறி கிளவியும்
மயங்கல் கூடா தம்மர பினவே.
 

இது  ‘வழுவற்க,’  என்று  காத்தலும், ‘வழுவினும்  அமைக,’ என்று
காத்தலுமாகிய இரண்டனுள், ‘வழுவற்க,’ என்று காக்கின்றது. 

(இ-ள்.)  வினையின்  தோன்றும்  பால்  அறி கிளவியும் - வினைச்
சொல்லான்   விளங்கும்   பால்  அறியப்படும்  பொருளும்,  பெயரின்
தோன்றும்  பாலறி  கிளவியும் -  பெயர்ச்சொல்லான்  விளங்கும் பால்
அறியப்படும்  பொருளும்,  மயங்கல் கூடா-ஒன்றோடு ஒன்றை மயங்கச்
சொல்லுதலைப்  பொருந்தா;  தம்  மரபின - தத்தம் இலக்கணத்தானே
சொல்லுதல் உடைய, எ-று. 

‘சொல்’  என்றார்  அதனான்  உணரும் பொருளை. பால் மயங்காது
எனவே, திணை மயங்காமையுங் கூறிற்றாம். 

(எ-டு.)  உண்டான்  அவன்,  உண்டான்  அவள், உண்டார் அவர்,
உண்டது  அது,  உண்டன  அவை - இவை வினை நின்று பெயர்மேல்
தத்தம் மரபினான் வந்தன. 

அவன்  உண்டான்,  அவள்  உண்டான்,  அவர்  உண்டார்,  அது
உண்டது, அவை உண்டன - இவை பெயர்