நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   502
Zoom In NormalZoom Out


ய்பாட்டான்   கூறலும்;  பண்புகொள் பெயர்க்கொடை, வழக்கினகத்தும்
‘பெருங்கொற்றன்,    பெருஞ்சாத்தன்’   என   இல்குணம்   அடுத்து
உயர்த்துக்கூறலும்  கொள்க. ‘என் பாவை வந்தது,’ என்பது ஆகுபெயர்.
அஃது ஒப்புள்வழிக் கூறியது. (27) 

இடம் பற்றி நிகழும் சொற்கள்

28. செலவினும் வரவினுந் தரவினுங் கொடையினும்
நிலைபெறத் தோன்றும் அந்நாற் சொல்லும்
தன்மை முன்னிலை படர்க்கை என்னும்
அம்மூ விடத்தும் உரிய என்ப.
 

இஃது இடம் பற்றி நிகழுஞ் சொற்களுக்குப் பொது விதி கூறுகின்றது.

(இ-ள்.) செலவினும்   வரவினுந்   தரவினுங்  கொடையினும் நிலை
பெறத்  தோன்றும்   அந்நாற்  சொல்லும்  -  செலவு முதலிய நான்கு
வினையானும்,   இடம்   நிலைபெறப்   புலப்படாநின்ற  அந்  நான்கு
சொல்லும்;  தன்மை   முன்னிலை படர்க்கை என்னும் அம்மூவிடத்தும்
உரிய    என்ப  -   தன்மை    முன்னிலை    படர்க்கை   என்னும்
அம்மூவிடத்திற்கும் உரியவாய் வரும் என்று கூறுவர் புலவர், எ-று. 

‘ஈங்கு’    முதலியன   தன்மைக்கண்ணும்,   ‘ஆங்கு’   முதலியன
படர்க்கைக் கண்ணும் அடக்கப்பட்டன. 

வினைச்சொல்  பால் உணர்த்தும் ஈற்றான் மூன்றிடத்திற்கும் உரிமை
வினையியலுட்  கூறி,   செலவு   முதலியன   முதனிலைதாமே  இடம்
உணர்த்தி   நிற்றலின்  ஈண்டுக் கூறினார், அவற்றுள் அடங்காமையின்.
(28) 

தன்மை முன்னிலைக்குரிய சொற்கள்

29. அவற்றுள்,
தருசொல் வருசொல் ஆயிரு கிளவியும்
தன்மை முன்னிலை ஆயீ ரிடத்த.
 

இஃது அவற்றுட் சிலவற்றிற்குச் சிறப்பிலக்கணங் கூறுகின்றது. 

(இ-ள்.) அவற்றுள்   தருசொல்   வருசொல்  ஆயிரு கிளவியும் -
முற்கூறிய  நான்கு சொல்லினுள் தரு சொல்லும் வரு சொல்லும் ஆகிய
இரண்டு சொல்லும், தன்மை முன்னிலை ஆயீரிடத்த